கால்பந்து உலகின் ஜாம்பவான் மாரடோனாவை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி புகழ்ந்து தள்ளியுள்ளார். 

உலக கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பான கட்டத்தில் உள்ளது. நாக் அவுட் சுற்றுகள் நடந்துவருகின்றன. கடந்த முறை உலக கோப்பையை வென்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி, இம்முறை லீக்கிலேயே வெளியேறியது.

கடந்த உலக கோப்பையில் இறுதி போட்டி வரை சென்ற அர்ஜெண்டினா, இம்முறை நாக் அவுட் சுற்றில் பிரான்ஸிடம் தோற்று வெளியேறியது. போர்ச்சுகல், உருகுவேயிடம் தோற்று வெளியேறியது. ஸ்பெயினை ரஷ்யாவும், டென்மார்க்கை குரோஷியாவும் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. 

உலக கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, தனக்கு மிகவும் பிடித்த கால்பந்து வீரரான மாரடோனாவை புகழ்ந்து டுவீட் செய்துள்ளார். 

கால்பந்து உலகின் ஜாம்பவான் மாரடோனாவின் 10 சிறந்த கோல்களின் வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து டுவீட் செய்துள்ளார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en-gb"><p lang="en" dir="ltr">Maradona ● Top 10 Goals ● Top 10 Skills <a href="https://t.co/adn0OpWxJc">https://t.co/adn0OpWxJc</a> via <a href="https://twitter.com/YouTube?ref_src=twsrc%5Etfw">@YouTube</a>...will all due respect to all every world confirms me that this genius came from a different planet ..master at work..greatest</p>&mdash; Sourav Ganguly (@SGanguly99) <a href="https://twitter.com/SGanguly99/status/1013156972282212357?ref_src=twsrc%5Etfw">30 June 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

அந்த டுவீட்டில், கால்பந்து மேதை மாரடோனாவை அனைவரும் புகழ்வது, அவர் வேறு கிரகத்தை சேர்ந்தவர் என்பதை உறுதி செய்கிறது என கங்குலி புகழ்ந்துள்ளார். அவரது திறமையை வைத்து பார்க்கும்போது அவர் பூமியில் பிறந்தவரே கிடையாது. வேற்று கிரகத்தை சேர்ந்தவராகத்தான் இருக்கவேண்டும் எனும் வகையில் மாரடோனாவை கங்குலி புகழ்ந்துள்ளார்.