கெர்ரி வெபர் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் கோரிச்சிடம் வீழ்ந்து நம்பர் ஒன் இடத்தை இழந்தார் ஃபெடரர்.

கெர்ரி வெபர் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜெர்மனியின் ஹாலே நகரில் நடைப்பெற்றது.

இதில் நேற்று நடந்த இறுதிச்சுற்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், ஒன்பது முறை சாம்பியனுமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், தரவரிசையில் 34-வது இடம் வகிக்கும் குரோஷியாவின் போர்னா கோரிச்சுடன் மோதினார். 

இரண்டு மணிநேரம் 6 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 21 வயதான கோரிச் 7-6 (6), 3-6, 6-2 என்ற செட் கணக்கில் ஃபெடரருக்கு அதிர்ச்சி தோல்வி கொடுத்தார்.

இறுதிப் போட்டியில் சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றார் கோரிச். 

இந்த வெற்றியின்மூலம் புல்தரை போட்டியில் தொடர்ச்சியாக 20 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த ஃபெடரரின் முன்னேற்றம் சற்றே சரிந்துள்ளது.

பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள தவறியதால் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் பறிகொடுப்பார் ஃபெடரர்.