இந்திய அணி கேப்டன் விராட் கோலியை எசெக்ஸ் கவுண்டி ஏளனம் செய்து டுவீட் செய்துள்ளது. அதற்கு ரசிகர்கள் கடும் கண்டனமும் பதிலடியும் கொடுத்து வருகின்றனர்.

சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரராக இந்திய அணி கேப்டன் கோலி வலம் வருகிறார். போட்டிக்கு போட்டி ரன்களை குவிப்பதால், ரன் மெஷின் என அழைக்கப்படுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளையும் சதங்களையும் குவித்துவருகிறார்.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, எசெக்ஸ் கவுண்டி அணியுடன் இந்திய அணி, பயிற்சி டெஸ்ட் போட்டியில் ஆடியது. அந்த போட்டியில், கோலி ஆடியதை கிண்டல் செய்து அந்த அணியின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அந்த பயிற்சி போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணியின் ஷிகர் தவான், புஜாரா, ரஹானே ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறிய நிலையில், விராட் கோலி சீரான வேகத்தில் ரன்களை குவித்து இந்திய அணியை மீட்டெடுத்தார். 93 பந்துகளில் 68 ரன்களை குவித்தார் கோலி.

இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள எசெக்ஸ் கவுண்டி அணி, இவரது ஆட்டம் மோசமாக இல்லை. 50 ரன்களை கடந்துவிட்டார் கோலி என கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டுள்ளது.

This guy’s not bad at cricket...
50 up for @imVkohli off 67 balls! 👌#ESSvIND pic.twitter.com/CS6ObCNweT
— Essex Cricket (@EssexCricket) July 25, 2018

எசெக்ஸ் கவுண்டி அணி கோலியை ஏளனம் செய்ததற்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர். ”கோலி ஒரு ரன் மெஷின் என்பது உலகிற்கே தெரியும், உங்களுக்கு இப்போதுதான் தெரிகிறதா? எனவும் ”கோலி இந்த டெஸ்ட் தொடரில் 3 சதங்களாவது அடிப்பார், உங்கள் வாயை மூடுங்கள்” எனவும் பல வகைகளில் பதிலடி கொடுத்துவருகின்றனர்.