ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து தொடரில், பிரிட்டன் அணி தொடர்ந்து வெற்றிவாகை சூடிவருவதால், அந்நாட்டில் குழந்தை பிறப்புஅதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக, ருசிகர தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் தற்போது ஃபிஃபா நடத்தும் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அர்ஜெண்டினா, பிரேசில், ஸ்பெயின், ரஷ்யா உள்ளிட்ட அணிகள் வெளியேறிவிட்ட நிலையில், ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிவரும் பிரிட்டன் அணி, தற்போது அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.இந்த செய்தி யாருக்கு மகிழ்ச்சி தருகிறதோ இல்லையோ, பிரிட்டன் கால்பந்து ரசிகர்களை அதிக உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளதாக, தெரியவந்துள்ளது. இந்த வெற்றி உற்சாகத்தில், பிரிட்டன் கால்பந்து ரசிகர்கள் செக்சில் சக்கை போடு போடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கருத்தரிப்பு விகிதம் அந்நாட்டில் உயர தொடங்கியுள்ளதாக, தி சன் இணையதள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பிரிட்டனில், கருத்தரிக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர தொடங்கியுள்ளது. குழந்தை பிறப்பு விகிதம் அடுத்த ஒன்பது  மாதங்களில் 10 சதவீதம் உயர வாய்ப்புள்ளது. இதற்கு கால்பந்து விளையாட்டு முக்கிய  காரணமாகும். பிரக்சிட் பிரச்னை, டொனால்டு டிரம்பின் திடீர் பொருளாதார முட்டுக்கட்டைகளால் பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் மக்கள் தற்போது உற்சாகமாக செக்சில் ஈடுபட தொடங்கியுள்ளனர். கால்பந்து தொடரில் பிரிட்டன் அணி தொடர் வெற்றி ஈட்டிவருவதே, மக்களின் திடீர் செக்ஸ் ஆர்வத்திற்கு காரணமாகும் என்றும் தி சன் இணையதளம் குறிப்பிட்டுள்ளது. கால்பந்து தொடரில் கிடைக்கும் வெற்றியால் ஒரு நாட்டின் மக்கள் செக்சில் அதிகம் ஈடுபடுவது சற்று விந்தையான செயலாகும். குறிப்பாக மேற்கத்திய நாடுகளில், மது, மாமிசம் போல வெற்றியை கொண்டாட செக்ஸ் முக்கிய வழியாக பின்பற்றப்படுகிறது.  ஏற்கனவே  இது போன்ற சம்பவங்கள், 2006 ஃபிஃபா கால்பந்து தொடரின்போது ஜெர்மனியிலும், 2011 ரக்பி தொடரின் போது நியூசிலாந்து  நாட்டிலும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் அணி மைதானத்தில் விளையாடுவதை பார்க்கும் ரசிகர்கள், வீட்டில் இருந்து கொண்டு கட்டில் விளையாட்டில் ஈடுபடுவது மிகவும் வித்தியாசமானது தான்,