இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்கியது. இந்திய நேரப்படி 3.30 மணிக்கு போட்டி தொடங்கி நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து ஆடி வருகிறது. இங்கிலாந்துக்கு இது ஆயிரமாவது சர்வதேச டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த போட்டிக்கான இந்திய அணியில் புஜாரா சேர்க்கப்படவில்லை. டெஸ்ட் வீரரான புஜாராவிற்கு பதிலாக ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். பயிற்சி போட்டியில் சரியாக ஆடாத தவானுக்கு பதிலாக ராகுல் சேர்க்கப்பட வேண்டும் என்ற குரல் எழுந்தது. ஆனால் புஜாராவிற்கு பதிலாக ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் நடந்த கவுண்டி போட்டிகள் மற்றும் பயிற்சி போட்டி ஆகியவற்றில் திணறிய புஜாரா, சரியாக ஆடவில்லை. எனவே அவர் இந்த போட்டியில் நீக்கப்பட்டுள்ளார். 

இந்திய அணி:

முரளி விஜய், ஷிகர் தவான், ராகுல், விராட் கோலி, ரஹானே, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி