இந்தியாவை எதிர்த்து போட்டிபோடும் இங்கிலாந்து அணி இயன் மார்கன் தலைமையில் களமிறக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை எதிர்த்து 5 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் மோதுகிறது இந்தியா.  இந்தப் போட்டிகளில் இந்தியாவை எதிர்த்து போராடும் 14 பேர் கொண்ட இங்கிலாந்து அணி நேற்று  அறிவிக்கப்பட்டது. 

இந்த அணிக்கு இயன் மார்கன் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதில் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் இடம்பெற்றுள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலிய அணியை 5-0 எனத் தோற்கடித்தது இங்கிலாந்து அணி. இதனால் இந்தத் தொடரில் தனது திறமையால் இந்தியாவுக்கு டஃப் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டியின் முதல் ஒருநாள் ஆட்டம் ஜூலை 12-ஆம் டிரெண்ட் பிரிட்ஜில் நடைபெறவுள்ளது.

அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணி: 

இயன் மார்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ், ஜேக் பால், ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), டாம் கர்ரன், அலெக்ஸ் ஹேல்ஸ், லியம் பிளங்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேஸன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, மார்க் உட்.