இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த 1997-ம் ஆண்டு நடந்த சஹாரா கோப்பை ஒருநாள் தொடரை கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அதிலும், இந்திய ரசிகர்ஒருவரை பேட்டால், அடித்து துவைத்த பாகிஸ்தான் வீரர் இன்சமாம் உல் ஹக்கின் செயல்தான் ஹாட்டாக இருந்தது. கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

கனடாவின் டொரோண்டோ நகரில் கடந்த 1997-ம் ஆண்டு 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட சஹாரா கோப்பைப் போட்டி நடந்தது. அந்த தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இதில் 2-வது ஒருநாள் போட்டி 1997-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி நடந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 45 ஓவர்களில்116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 116 ரன்களைத் துரத்திய இந்திய அணி3.4.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு119 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வி்த்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர் இன்சமாம் உல் ஹக் பவுண்டரி எல்லையில் பீல்டிங்கில் இருந்தார். அப்போது இந்திய ரசிகர் சிவகுமார் தின்டா என்பவர் கையில் வைத்திருந்த சிறிய மைக் மூலம் இன்சமாம் உல் ஹக்கை கிண்டல் செய்து கொண்டே இருந்தார்.

பவுண்டரியில் நேராக நில், வயிற்றில் உருளைக்கிழங்கு வைத்திருக்கிறாயா, உன்னால் ஓட முடியுமா, அழுகிய உருளைக்கிழங்கே என்று கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. அமைதியாக பொறுமையா இருந்த இன்சமாம் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை இழந்து, அரங்கில் அமர்ந்திருந்த அந்த ரசிகரை கீழே இழுத்துப்போட்டு தாக்கினார். இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இதைப் பார்த்த மற்ற பாகிஸ்தான் வீரர்கள், போலீஸர விரைந்து வந்து இன்சமாம் உல் ஹக்கை பிரித்து அழைத்துச் சென்றனர். ஆனால், அடிபட்ட அந்த ரசிகர் வேகமாக இன்சமாமை நோக்கி ஓடி வரவே, பேட்டை பிடுங்கி அடித்தார். அதன்பின் போலீஸார், நடுவர்கள், நிர்வாகிகள் அனைவரும் வந்து இன்சமாம் உல் ஹக்கை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர்.

கிரிக்கெட் உலகில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது, சஹாரா கோப்பைப் போட்டி என்றாலே ரசிகரை புரட்டி எடுத்த இன்சமாம் உல் ஹக் சம்பவம் தான் நினைவுக்கு வரும். அந்த சம்பவம் நடந்து இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.