இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. 

தொடக்க வீரர்களாக அலெஸ்டர் குக் மற்றும் ஜென்னிங்ஸ் களமிறங்கினர். இருவரும் இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரின் பந்துவீச்சை திறமையாக எதிர்கொண்டு ஆடினர். ஆனால் அஷ்வின் வீசிய 9வது ஓவரில் குக் போல்டாகி வெளியேறினார். அதன்பிற்கு ஜென்னிங்ஸுடன் ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியதோடு ரன்களையும் சேர்த்தது. 

முகமது ஷமியின் பவுலிங்கில் இன்சைட் எட்ஜ் ஆகி ஜென்னிங்ஸ் போல்டானார். 42 ரன்களில் ஜென்னிங்ஸ் அவுட்டானார். டேவிட் மாலனை 8 ரன்களில் வெளியேற்றினார் ஷமி. ரூட்டும் பேர்ஸ்டோவும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர்.  80 ரன்களில் ரூட்டை கோலி ரன் அவுட்டாக்கி அனுப்பினார். பேர்ஸ்டோவும் 70 ரன்களில் உமேஷ் யாதவின் பந்தில் போல்டானார். 

ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரை அஷ்வின் அவுட்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பினார். அடில் ரஷீத், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரும் அடுத்தடுத்து வெளியேறினர். குரானுடன் ஆண்டர்சன் ஜோடி சேர்ந்தார். நேற்றைய ஆட்டத்தின் கடைசி ஓவரின் 5வது பந்தில் குரான் அடித்த பந்து எட்ஜ் ஆகி பின்னே செல்ல, அந்த கேட்ச் வாய்ப்பை தினேஷ் கார்த்திக் நழுவவிட்டார். அதன்பிறகு நேற்றைய ஆட்டம் முடிந்துவிட்டது. நேற்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்தது. 

அந்த கேட்ச்சை தினேஷ் கார்த்திக் பிடித்திருந்தால், முதல் நாளிலேயே இங்கிலாந்தை ஆல் அவுட் செய்திருக்கலாம். இரண்டாம் நாளான இன்று இந்திய அணி பேட்டிங் ஆடியிருக்கலாம். தினேஷ் கார்த்திக் நழுவவிட்ட கேட்ச்சால் அந்த வாய்ப்பு நழுவிப்போனது.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">England would have been all out on day 1 if...Karthik had grabbed this one.<a href="https://twitter.com/hashtag/ENGvIND?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ENGvIND</a> <a href="https://t.co/rGUh6KrqEm">pic.twitter.com/rGUh6KrqEm</a></p>&mdash; Deepak Raj Verma (@iconicdeepak) <a href="https://twitter.com/iconicdeepak/status/1024711920291655681?ref_src=twsrc%5Etfw">August 1, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இன்று மீண்டும் இந்திய அணி பவுலிங் செய்ய வேண்டும். தினேஷ் கார்த்திக் கேட்ச்சை நழுவவிட்டது சக வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.