விமானத்தில் பேட்டி எடுக்க வந்த ஹர்திக் பாண்டியாவை தோனி கிண்டல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் ஆட சென்றுள்ளது. அயர்லாந்துக்கு எதிராக நாளை ஒரு டி20 போட்டியும் வரும் 29ம் தேதி ஒரு டி20 போட்டியும் நடைபெற உள்ளது. அதை முடித்துக்கொண்டு இங்கிலாந்து செல்லும் இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது.

இதற்காக கடந்த 2 தினங்களுக்கு முன் இந்திய அணி அயர்லாந்து கிளம்பி சென்றது. அப்போது விமானத்தில் செல்லும்போது நடந்த கலகலப்பான சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

விமானத்தில் செல்லும்போது, இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, கோலி தொடங்கி உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், மனீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், ரோஹித் சர்மா ஆகியோரிடம் பேட்டி எடுப்பது போன்று சில கேள்விகளை கேட்டு பதிலை பெற்றுக்கொண்டே செல்கிறார்.

அந்த வரிசையில் தோனியிடம் செல்கிறார். மிகவும் சீரியஸாக லேப்டாப்பில் படம் பார்த்துக்கொண்டிருக்கும் தோனி, ஹர்திக் பாண்டியாவை நிமிர்ந்து கூட பார்க்காமல் ஒரு சிப்ஸை கொடுத்து போ போ என கையசைக்கிறார். இதையடுத்து தோனியிடமிருந்து பாண்டியா சிரித்துகொண்டே நகர்கிறார்.

Hi mahi bhai

தோனி - பிஸ்கட் தான இந்தா கிளம்பு 😂😍

Bye mahi bhai 😂 pic.twitter.com/YGgRXABEi3
— ℳsᴅ பிளேடு (@KickOffl7) June 26, 2018

பாண்டியாவை கிண்டல் செய்யும் வகையிலான தோனியின் செயல், சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.