இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில், குல்தீப் வீசிய பந்தை பிடிக்க தடுமாறிய தோனி, சுதாரிப்புடன் பிடித்து ஸ்டம்பிங் செய்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குல்தீப் யாதவின் அசத்தலான பவுலிங், ராகுலின் அதிரடியான பேட்டிங்கால், இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்தது. 

இந்த போட்டியின் போக்கை மாற்றியதே குல்தீப் யாதவ் தான். இங்கிலாந்து வசமிருந்து ஆட்த்தை இந்தியாவின் பக்கம் திருப்பினார் குல்தீப். அதன்பிறகு இங்கிலாந்தால் போட்டிக்குள் வரவே முடியவில்லை. 

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய இருவரும் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர். 30 ரன்களில் ராய் வெளியேறிய பிறகும் அதிரடியை தொடர்ந்தார் பட்லர். அலெக்ஸ் ஹேல்ஸ் திணறினார். ஆனால் பட்லர் அசராமல் அடித்து ஆடினார். 13 ஓவருக்கு 106 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது இங்கிலாந்து.

14வது ஓவர்தான் போட்டியின் போக்கையே மாற்றியது. இங்கிலாந்திடமிருந்து ஆட்டத்தை பறித்து இந்தியாவிற்கு பிரேக் கொடுத்தார் குல்தீப். 14வது ஓவரை வீசிய குல்தீப், அந்த ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இயன் மோர்கன், பேர்ஸ்டோ, ஜோ ரூட் ஆகிய மூன்று முக்கிய பேட்ஸ்மேன்களையும் ஒரே ஓவரில் வீழ்த்தினார்.

பேர்ஸ்டோ மற்றும் ரூட் ஆகிய இருவரையும் அடுத்தடுத்து தோனி ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார். அதில், ரூட்டிற்கு வீசப்பட்ட பந்தை பிடிக்க தோனி தடுமாறினார். குல்தீப் வீசிய பந்து, தோனியின் கையில் பிடிபடாமல் க்ளௌஸ் மற்றும் ஹெல்மெட்டில் பட்டது. எனினும் சுதாரித்துக்கொண்ட தோனி, கவனமாக பந்தை பிடித்து, ஸ்டம்பிங் செய்து ரூட்டை அனுப்பிவைத்தார். 

<blockquote class="twitter-tweet" data-lang="en-gb"><p lang="und" dir="ltr"><a href="https://t.co/fUiSnAq6mo">pic.twitter.com/fUiSnAq6mo</a></p>&mdash; Utkarsh Bhatla (@UtkarshBhatla) <a href="https://twitter.com/UtkarshBhatla/status/1014202156394733571?ref_src=twsrc%5Etfw">3 July 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.