இந்தியா அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று டப்ளினில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தவான் மற்றும் ரோஹித்தின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவர் முடிவில் 208 ரன்களை குவித்தது. 

209 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ஷேனானை தவிர மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை. ஷேனான் மட்டும் அதிரடியாக ஆடி 60 ரன்கள் குவித்தார். அவர் வழங்கிய மூன்று கேட்ச் வாய்ப்புகளை இந்திய வீரர்கள் தவறவிட்டனர். 

அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி அதிரடியாக ஆடிய ஷேனான், சாஹலின் பந்துவீச்சை பறக்கவிட்டார். சாஹல் வீசிய 7வது ஓவரின் 5வது பந்தில் ஷேனான் சிக்ஸர் அடித்தார். அதற்கு அடுத்த பந்தையும் அடிக்க முயன்றார். ஆனால் பந்து அவரது கால் காப்பில் பட்டது. அது எல்.பி.டபிள்யூ மாதிரி தெரிந்ததால் சாஹல் நம்பிக்கையுடன் நடுவரிடம் அப்பீல் செய்தார். ஆனால் நடுவர் அவுட் தர மறுத்துவிட்டார். 

சாஹல் ஏமாற்றத்துடன் விக்கெட் கீப்பர் தோனியை பார்த்தார். அது அவுட் தான் என்பது தோனிக்கும் உறுதியாக தெரியும். ஆனால் டி20 போட்டிகளில் டி.ஆர்.எஸ் முறை நடைமுறையில் இல்லை என்பதால், அவரும் சாஹலிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதை ரிவியூ செய்து பார்த்தால் அது அவுட் தான்.

<blockquote class="twitter-tweet" data-lang="en-gb"><p lang="en" dir="ltr">Dhoni is available, DRS is not! <a href="https://t.co/bNfCviFJeI">pic.twitter.com/bNfCviFJeI</a></p>&mdash; Anshul kothari (@cricketvideo18) <a href="https://twitter.com/cricketvideo18/status/1012025083072741382?ref_src=twsrc%5Etfw">27 June 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

சாஹலின் அதிருப்தி மற்றும் தோனியின் ரியாக்‌ஷன் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.