Asianet News TamilAsianet News Tamil

ஒரே போட்டியில் சாதனைகளை வாரி குவித்த தோனி!! போட்டிக்கு போட்டி மாஸ் காட்டும் தல

dhoni reached several milestones in 2nd odi against england
dhoni reached several milestones in 2nd odi against england
Author
First Published Jul 15, 2018, 9:01 AM IST


இங்கிலாந்துக்கு எதிரான நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரண்டு மைல்கற்களை தோனி எட்டியுள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு பதிலடி கொடுத்தது. 

dhoni reached several milestones in 2nd odi against england

இந்த போட்டியில் தோனி இரண்டு மைல்கற்களை எட்டியுள்ளார். விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான தோனி, அந்த இரண்டிலுமே ஒவ்வொரு மைல்கற்களை எட்டியுள்ளார். 

லண்டன் லார்ட்ஸில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் ஆகிய இருவரின் கேட்ச்களையும் விக்கெட் கீப்பர் தோனி பிடித்தார். 37வது ஓவரின் மூன்றாவது பந்தில் உமேஷ் யாதவ் வீசிய பந்தில் பட்லரின் கேட்ச்சை தோனி பிடித்தார். இது சர்வதேச ஒருநாள் போட்டியில் தோனி பிடித்த 300வது கேட்ச் ஆகும். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் 300 கேட்ச்களை கடந்த நான்காவது விக்கெட் கீப்பர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார். தோனிக்கு முன்னதாக ஆடம் கில்கிறிஸ்ட்(417), மார்க் பௌச்சர்(403), குமார் சங்கக்கரா(402) ஆகியோர் அதிக கேட்ச்களில் முன்னிலையில் உள்ளனர். 

dhoni reached several milestones in 2nd odi against england

இந்த மைல்கல்லை எட்டிய கையோடு, அடுத்த மைல்கல்லையும் எட்டினார் தோனி. இரண்டாவதாக இந்திய அணி பேட்டிங் ஆடியபோது, தோனி 37 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் 33வது ரன்னை எட்டியபோது, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்களை கடந்த 12வது வீரர் என்ற மைல்கல்லை எட்டினார். அதுமட்டுமல்லாமல் 10000 ரன்களை கடக்கும் 4வது இந்திய வீரர் தோனி தான். மேலும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் வேகமாக 10000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் 5வது இடத்தை தோனி பிடித்துள்ளார். தோனி 273வது போட்டியில்(நேற்றைய போட்டி) 10000 ரன்களை கடந்துள்ளார்.

dhoni reached several milestones in 2nd odi against england

தோனிக்கு முன்னதாக வேகமாக 10000 ரன்களை கடந்த வீரர்களில் சச்சின் முதலிடத்திலும் கங்குலி இரண்டாவது இடத்திலும் உள்ளனர். பாண்டிங் மற்றும் ஜாக் காலிஸ் முறையே 3 மற்றும் 4வது இடத்தில் உள்ளனர். இவர்களை தொடர்ந்து தோனி 5வது இடத்தில் உள்ளார். 

dhoni reached several milestones in 2nd odi against england

இங்கிலாந்துக்கு கடைசி டி20 போட்டியில் 5 கேட்ச்களை பிடித்த தோனி, சர்வதேச டி20 போட்டிகளில் அதிக கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது. போட்டிக்கு போட்டி தோனி சாதனைகளை குவித்து வருகிறார். 

முதல் ஒருநாள் போட்டியில் தோனிக்கு பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால், அந்த போட்டியிலேயே 10000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியிருக்க கூடும். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios