இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தவான் கவனக்குறைவால் ரன் அவுட்டாகி ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. முதல் போட்டியில் வென்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியிலும் வென்று தொடரை வெல்லும் முனைப்பிலும் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க முனைப்பில் இங்கிலாந்தும் களம் கண்டன.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 148 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் அலெக்ஸ் ஹேல்ஸின் அதிரடியான பேட்டிங்கால், அந்த அணி இந்தியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, 5 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து மற்றொரு தொடக்க வீரரான தவான், கவனக்குறைவால் மிகவும் சங்கடமான முறையில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

பிளன்கெட் வீசிய 4வது ஓவரின் இரண்டாவது பந்தை அடித்துவிட்டு தவான் ரன் ஓடினார். அந்த பந்தை பிடித்த ராய், தவானை ரன் அவுட்டாக்க பவுலிங் முனைக்கு பந்தை வீசினார். அந்த பந்தை பிடித்த இயன் மோர்கன், ரன் அவுட்டாக்க, கள நடுவர் மூன்றாவது நடுவரின் உதவியை நாடினார்.

அப்போது, அதை ரீவைண்ட் செய்து பார்க்கும்போது தவான் அவுட் என்பது உறுதியானது.  வேகமாக ஓடிவந்த தவான், கிரீசுக்குள் வரும்போது, அவரது பேட் கையிலிருந்து நழுவியது. அவரது காலும் கிரீசுக்குள் காற்றில் இருந்தது(தரையில் இல்லை). அதனால் ரன் அவுட்டானார் தவான்.

Bizarre dismissal too casual @SDhawan25 tad unlucky though #INDvENG pic.twitter.com/iIflUIiBCu
— Arnab Mukherjee (@ArnabMu72704073) July 6, 2018

தரமான பந்தில் அடித்து அவுட்டாவது மனதை பெரியளவில் சங்கடப்படுத்தாது. ஆனால் அபத்தமான முறையில் அவுட்டானார் தவான். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.