ரொனால்டோ அடித்த கோலை பார்த்து ஆனந்த கண்ணீரில் மூழ்கிய தாய்..! உணர்ச்சிகரமான சம்பவம்
யு.இ.எஃப்.ஏ நேஷன்ஸ் லீக் தொடரில் போர்ச்சுகலை சேர்ந்த லெஜண்ட் கால்பந்து வீரர் ரொனால்டோ அடித்த கோலை கண்டு அவரது தாய் ஆனந்த கண்ணீர் விட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.
ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்கு இடையிலான யு.இ.எஃப்.ஏ(UEFA) நேஷன்ஸ் லீக் 2022-23 தொடர் நடந்துவருகிறது. லீக் போட்டிகள் ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கியது.
55 அணிகள் பங்கேற்று ஆடிவரும் இந்த தொடரில் போர்ச்சுகல் அணி க்ரூப் ஏ2-வில் இடம்பெற்றுள்ளது. லிஸ்பன் நகரில் போர்ச்சுகலுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையே நடந்த போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் போர்ச்சுகலை சேர்ந்த லெஜண்ட் கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானா ரொனால்டோ 2 கோல்களை அடிதார். சர்வதேச கால்பந்தாட்ட போட்டியில் அவரது 116 மற்றும் 117வது கோல்கள் இவையாகும். இந்த போட்டியை ஸ்டேடியத்தில் நேரில் பார்த்த ரொனால்டோவின் தாய், ரொனால்டோ அவரது நாட்டுக்காக கோல் அடித்த காட்சியை கண்டு ஆனந்த கண்ணீர் விட்டார். அவர் ஆனந்த கண்ணீரில் மூழ்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.