Asianet News Tamil

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் சச்சின்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கொரோனா தொற்று, கடந்த சில மாதங்களாக சற்று தணிந்த நிலையில், மீண்டும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வேகமெடுக்க துவங்கியுள்ளது. குறிப்பாக தமிழகம், கர்நாடகா, கேரளா, குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
 

cricketer sachin Tendulkar affected covid19
Author
Chennai, First Published Mar 27, 2021, 11:17 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

கொரோனா தொற்று, கடந்த சில மாதங்களாக சற்று தணிந்த நிலையில், மீண்டும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வேகமெடுக்க துவங்கியுள்ளது. குறிப்பாக தமிழகம், கர்நாடகா, கேரளா, குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

கொரோனா மீண்டும் தன்னுடைய சுயரூபத்தை காட்ட துவங்கியுள்ளதால், சுகாதாரத்துறை... மக்கள் வெளியில் செல்லும் போது முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு சில வாரங்களாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மீண்டும் ஊரடங்கு போடப்படும் நிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

சமீபத்தில் தான் பிரபல நடிகர் அமீர் கான், மாதவன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது...  "கொரோனா அறிகுறி தென்பட்டால் தானாகவே முன்வந்து கொரோனா பரிசோதனை மேற் கொண்டதாகவும், அதில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்ட போது யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தற்போது மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார். இது கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios