உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்காக இந்தியா-இங்கிலாந்து போட்டி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் , 3 ஒருநாள் போட்டிகள் தொடரில் பங்கேற்றுள்ளது. டி20 தொடரை இந்திய அணி 2-1 என வென்று அசத்தியது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. அதேபோல் ரஷ்யாவில் நடைப்பெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் 3-வது,4-வது இடத்திற்கான போட்டி இன்று இங்கிலாந்து-பெல்ஜியம் அணிகளுக்கிடையே நடைப்பெற உள்ளது. நாளை ஜூலை 15-ம் தேதி உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடைப்பெற உள்ளது. இதில் பிரான்ஸ் - குரேஷியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்நிலையில் நாளை 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என அட்டவணையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நாளை நடைப்பெற உள்ளதால், 2-வது ஒருநாள் போட்டி, இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. சென்ற போட்டி 5 மணிக்கு தொடங்கப்பட்டது. ஆனால் இன்று 3-வது இடத்திற்கான கால்பந்து உலகக் கோப்பை, அதுவும் இங்கிலாந்து விளையாடுவதால் போட்டி 3.30-க்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.