இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்களை எடுத்துள்ளது இங்கிலாந்து அணி. 

அஷ்வின் மற்றும் ஷமியின் அசத்தலான பந்துவீச்சில் இங்கிலாந்து அணி, முதல் நாள் ஆட்டத்திலேயே சுருண்டது. நேற்றைய ஆட்டத்தின் கடைசி ஓவரின் 5வது பந்தில் குரானின் கேட்ச்சை தினேஷ் கார்த்திக் பிடித்திருந்தால், முதல் நாளே இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் முடிந்திருக்கும். ஆனால் அந்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டதால், இங்கிலாந்து அணி இன்றும் முதல் இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிவருகிறது. 

முதல் நாளில் அஷ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஷ்வின் வீசிய பந்தை பென் ஸ்டோக்ஸ் அடிக்க அது, எதிர்முனையில் நின்றுகொண்டிருந்த மற்றொரு பேட்ஸ்மேனான குரானுக்கு நேராக சென்றது. அதை கேட்ச் பிடிக்க அஷ்வின் முயன்றபோது, குரான் விலகியதை அடுத்து எளிதாக கேட்ச் பிடித்து ஸ்டோக்ஸை அவுட்டாக்கினார் அஷ்வின். 

அந்த நேரத்தில் குரான் விலகியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. அவர் நின்ற இடத்திலேயே நின்றிருந்தால், அஷ்வின் கேட்ச் பிடிக்க சிரமமாக இருந்திருக்கும். குரான் விலகியிருக்க வேண்டியதில்லை என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் மார்கஸ் நார்த், டீன் ஜோன்ஸ் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். 

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Just seen Stokes dismissal for the first time...why didn&#39;t S.Curran stand his ground at the non strikers!? Instead he moved out of the way to give Ashwin a clear right of way to catch the ball. 😞</p>&mdash; Marcus North (@Marcus_North) <a href="https://twitter.com/Marcus_North/status/1024778799328780288?ref_src=twsrc%5Etfw">August 1, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

கிரிக்கெட் விதிகளின் படி, ஃபீல்டரை வேண்டுமென்றே பேட்ஸ்மேன் தொந்தரவு செய்தால், அதுதான் தவறே தவிர, பேட்ஸ்மேன் நின்ற இடத்தில் இருந்து, ஃபீல்டருக்கு உதவும் வகையில் நகர தேவையில்லை என்பதை சுட்டிக்காட்டியும் குரானின் செயல்பாடு விமர்சிக்கப்படுகிறது.