இந்திய அணிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே டி20 கிரிக்கெட்டின் ஒரு விஷயத்தில் கடுமையான போட்டி நிலவிவருகிறது. 

தொடர்ந்து டி20 தொடர்களை வெல்வதில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி நேற்று வென்றது. இது இந்திய அணி தொடர்ச்சியாக வெல்லும் 6வது டி20 தொடர். 

அதேநேரத்தில் ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 தொடரை பாகிஸ்தான் வென்றுள்ளது. இது பாகிஸ்தான் தொடர்ச்சியாக வென்ற 9வது டி20 தொடர். 

தொடர்ச்சியாக அதிகமான டி20 தொடர்களை வென்ற அணிகளின் பட்டியலில் 9 தொடர்களை வென்ற பாகிஸ்தான் அணி முதலிடத்திலும் 6 தொடர்களை வென்ற இந்திய அணி இரண்டாமிடத்திலும் உள்ளது. 

இரு அணிகளின் தொடர் வெற்றிகளும் இன்னும் முடிவுறவில்லை. இரு அணிகளுக்கும் இடையே நிலவும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை பார்ப்போம்.

இந்திய அணி தொடர்ச்சியாக வென்ற 6 டி20 தொடர்கள்:

1. நியூசிலாந்துக்கு எதிரான தொடர் - இந்தியா வெற்றி (2-1) 

2. இலங்கைக்கு எதிரான தொடர் - இந்தியா வெற்றி (3-0)

3. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் - இந்தியா வெற்றி (2-1)

4. நிதாஹஸ் டிராபி (முத்தரப்பு தொடர் - இந்தியா, இலங்கை, வங்கதேசம்) - இந்தியா வெற்றி

5. அயர்லாந்துக்கு எதிரான தொடர் - இந்தியா வெற்றி (2-0)

6. இங்கிலாந்துக்கு எதிரான தொடர் - இந்தியா வெற்றி (2-1)