Asianet News TamilAsianet News Tamil

#TokyoOlympics 2ம் நாள்: 11 பதக்கங்களுடன் சீனா தொடர்ந்து முதலிடம்..! ஒரே நாளில் 10 பதக்கங்களை வென்ற அமெரிக்கா

டோக்கியோ ஒலிம்பிக் 2ம் நாள் முடிவில் 11 பதக்கங்களுடன் சீனா பதக்க பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. முதல் நாள் முடிவில் ஒரு பதக்கம் கூட வெல்லாத அமெரிக்கா, 2ம் நாளான இன்று 10 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளது.
 

china leading in tokyo olympic medal table with total 11 medals and usa won 10 medals in second day
Author
Tokyo, First Published Jul 25, 2021, 9:27 PM IST

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. 2 நாட்கள் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், முதல் நாள் முடிவில் பதக்க பட்டியலில் முதலிடத்தில் இருந்த சீனா தான், 2ம் நாள் முடிவிலும் முதலிடத்தில் நீடிக்கிறது.

6 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 5 தங்கம் மற்றும் ஒரு வெள்ளியுடன் 6 பதக்கங்களை வென்ற ஜப்பான் 2ம் இடத்தில் உள்ளது.

china leading in tokyo olympic medal table with total 11 medals and usa won 10 medals in second day

முதல் நாளில் ஒரு பதக்கம் கூட வெல்லாத அமெரிக்கா, 2ம் நாளான இன்று 4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது. ஜப்பானைவிட(6) அமெரிக்கா(10) மொத்தமாக அதிக பதக்கங்களை வென்றிருந்தாலும், ஜப்பான்(5) அமெரிக்காவைவிட(4) அதிக தங்கத்தை வென்றிருப்பதால் ஜப்பான் 2ம் இடத்திலும் அமெரிக்கா 3ம் இடத்திலும் உள்ளது.

முதல் நாளில் மீராபாய் சானு இந்தியாவிற்கு பளுதூக்குதலில் வெள்ளி பதக்கம் வென்று கொடுத்த நிலையில், அதன்பின்னர் இந்தியா எந்த பதக்கமும் வெல்லவில்லை. எனவே ஒரோயொரு பதக்கத்துடன் பதக்க பட்டியலில் இந்தியா 24ம் இடத்தில் உள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios