சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதும் அரையிறுதி போட்டி தொடங்கி விட்டது. இந்திய அணி முதலில் பவுலிங் செய்கிறது.
India vs Australia Semi Final : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி முதலில் பவுலிங் செய்கிறது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிக்கட்டத்துக்கு வந்து விட்டது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா என 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டன.
இந்தியா ஆஸ்திரேலியா அரையிறுதி
இந்நிலையில், இதில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான முதலாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி முதலில் பவுலிங் செய்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீபன் ஸ்மித் தங்கள் முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி இந்தியா முதலில் பவுலிங் செய்யும். இந்திய அணியை பொறுத்தவரை நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் நியூசி வீரர் எறிந்த த்ரோவால் காயம் அடைந்த முகமது ஷமி விளையாட மாட்டார் என கூறப்பட்டது. ஆனால் அவர் இன்றைய போட்டியில் விளையாடுகிறார்.
இந்திய அணி பிளேயிங் லெவன்
நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய அதே வீரர்கள் இந்த போட்டியில் விளையாடுகின்றனர். இந்திய அணி
4 ஸ்பின்னர்கள், ஒரு பாஸ்ட் பவுலர், ஒரு மீடியம் பாஸ்ட் பவுலருடன் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான செமி பைனலில் இந்திய அணி பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், மற்றும் முகமது ஷமி
ரோகித் சர்மா, சுப்மன் கில்லும் வழக்கம்போல் ஒப்பனிங்கில் களமிறங்க உள்ளனர். விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் மிடில் ஆர்டரில் விளையாட உள்ளனர். அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா பின்வரிசையில் பலம் சேர்கக் இருக்கின்றனர்.
ஆஸ்திரேலியா அணி எப்படி?
ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயம் அடைந்து வெளியேறிய மேத்யூ ஷார்ட்டுக்கு பதிலாக கூப்பர் கோனோலி இடம்பெற்றுள்ளார். இதேபோல் பென் த்வார்ஷுயிக்கு பதிலாக தன்வீர் சங்கா இடம்பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவும் ஆடம் ஜாம்பா, தன்வீர் சங்கா என இரண்டு பிரதான ஸ்பின்னர்களுடன் விளையாடுகிறது.
