இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரிஸ்ட் ஸ்பின்னர் சாஹல், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது முதல் பவுண்டரியை அடித்துவிட்டு, பேட்டை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதையடுத்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங்  செய்த இங்கிலாந்து அணி, 322 ரன்களை குவித்தது. 323 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் முதல் மூன்று விக்கெட்டுகள் 11 ஓவருக்கு உள்ளாகவே வீழ்ந்துவிட்டது. அதன்பிறகு கோலியும் ரெய்னாவும் அணியை மீட்டெடுத்தனர். எனினும் கோலியும் ரெய்னாவும் முறையே 45 மற்றும் 46 ரன்களில் வெளியேறினர். அதன்பிறகு மந்தமாக ஆடிய தோனியும் வெற்றி பெறுவதற்கான முயற்சியே எடுக்காமல் 20 ஓவர்கள் ஆடிவிட்டு கடைசி நேரத்தில் அவுட்டாகிவிட்டார். 

அதனால் கடைசி வீரராக சாஹல் களமிறங்கினார். டேவிட் வில்லி வீசிய 48வது ஓவரின் 5வது பந்தில் சாஹல் பவுண்டரி அடித்தார். இதுதான் சர்வதேச ஒருநாள் போட்டியில் அவர் அடித்த முதல் பவுண்டரி. அதனால் பேட்டை உயர்த்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பவுண்டரி அடித்துவிட்டு அதை கொண்டாடிய சாஹலின் செயலை கண்டு எதிர்முனையில் இருந்த குல்தீப் யாதவ் சிரித்தார். பெவிலியனில் இருந்த கோலி மற்றும் ரெய்னா உள்ளிட்ட வீரர்களும் சிரித்தனர்.  இந்த போட்டியில் 12 பந்துகளை எதிர்கொண்ட சாஹல், 2 பவுண்டரிகள் உட்பட 12 ரன்கள் எடுத்தார். 

<blockquote class="twitter-tweet" data-lang="en-gb"><p lang="en" dir="ltr">Yuzvendra Chahal hits a beautiful straight drive at the Lord&#39;s. First boundary of his whole ODI career. He raises his bat, team applauds. Kuldeep is all smiles. Lovely moment for Indian cricket. <a href="https://twitter.com/hashtag/ENGvIND?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ENGvIND</a> <a href="https://t.co/k0wS5JPKx4">pic.twitter.com/k0wS5JPKx4</a></p>&mdash; Deepak Raj Verma (@iconicdeepak) <a href="https://twitter.com/iconicdeepak/status/1018192198226055169?ref_src=twsrc%5Etfw">14 July 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

முதல் பவுண்டரியை அடித்துவிட்டு பேட்டை உயர்த்தி சாஹல் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.