விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கார்பைன் முகுருஸா, மரின் சிலிச் அதிர்ச்சித் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பெல்ஜிய வீராங்கனை அலிஸன் மற்றும் நடப்பு சாம்பியன் கார்பைன் முகுருஸா ஆகியோர் மோதினர்.

விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் 7-5, 2-6, 1-6 என்ற செட் கணக்கில் முகுருஸா தோல்வியடைந்து அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்த தோல்வியின்மூலம் அவர் போட்டியில் இருந்து வெளியேறினார். 

இப்போது இந்தப் போட்டியில் பட்டம் வெல்லும் வாய்ப்பு சீமோனா ஹலேப், கரோலினா பிளிஸ்கோவா, மடிசன் கீய்ஸ் ஆகியோருக்கு மட்டுமே உள்ளது.

அதேபோன்று, ஆடவர் பிரிவில் கடந்த ஆண்டு 2-ஆம் இடம் பெற்ற மரின் சிலிச் மற்றும் அர்ஜென்டீனாவின் கியுடோ பெல்லா மோதினர். இதில், 3-6, 1-6, 6-4, 7-6, 7-5 என்ற செட் கணக்கில் பெல்லாவிடம் தோல்வியுற்றார் மரின் சிலிச்.