பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா, நடுவருடன் வீண் வாதத்தில் ஈடுபட்டதால் அவருடைய போட்டி ஊதியத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 47-ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் - குஜராத் மோதின. இது மொஹாலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் சந்தீப் சர்மா தனது மூன்றாவது ஓவரை வீசியபோது ஆடுகளத்தில் பந்துவீசும் பகுதியை நடுவரிடம் தெரிவிக்காமல் மாற்றினார்.

இதனையடுத்து அவர் வீசிய பந்தை நடுவர் நோ-பால் என அறிவித்தார்.

பின்னர், நடுவர், சந்தீப் சர்மா இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நடுவரிடம் விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதால் சந்தீப் சர்மாவுக்கு அவருடைய சம்பளத்தில் பாதி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.