அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் குடும்பத்தை அழைத்து செல்ல இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது. 

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி, செப்டம்பர் மாதத்தில் தான் மீண்டும் இந்தியா திரும்புகிறது. இந்த மாத இறுதியில் அயர்லாந்துடன் 2 டி20 போட்டிகளை முடித்துவிட்டு, அங்கிருந்து இங்கிலாந்து செல்கிறது இந்திய அணி.

இங்கிலாந்துடன் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஆடுகிறது. கடைசி டெஸ்ட் போட்டி செப்டம்பர் 11ம் தேதியுடன் முடிவடைகிறது. 

அதனால் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக இங்கிலாந்தில் இந்திய அணி இருக்க உள்ளது. அதனால் நீண்டகாலம் குடும்பத்தை பிரிய நேரிடுகிறது. பொதுவாக வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது வீரர்கள் குடும்பத்தை பிரிய நேரிடுவது வழக்கம் தான். 

எனினும் இரண்டரை மாதங்கள் மிக நீண்ட காலம் என்பதால், வீரர்கள் தங்களுடன் குடும்பத்தையும் அழைத்து செல்ல பிசிசிஐ அனுமதித்துள்ளது. குடும்பத்தினரை அழைத்து செல்வதன்மூலம் வீரர்களால், போட்டிகளில் முழு கவனம் செலுத்த முடியும் என பிசிசிஐ நம்புகிறது. அதனால் குடும்பத்தினரை அழைத்து செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.