Asianet News TamilAsianet News Tamil

இளம் வீரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ராகுல் டிராவிட்!!

bcci accepts rahul dravid recommendation
bcci accepts rahul dravid recommendation
Author
First Published Jun 26, 2018, 12:46 PM IST


இந்திய ஏ அணிக்கு அதிகமான போட்டிகளை நடத்த வேண்டும் என்ற டிராவிட்டின் கோரிக்கையை பிசிசிஐ ஏற்று, நடவடிக்கை எடுத்துள்ளதால் இளம் வீரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணி மற்றும் இந்திய ஏ அணி ஆகியவற்றிற்கு ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக உள்ளார். இந்திய ஏ அணி தற்போது இங்கிலாந்தில் நடந்துவரும் முத்தரப்பு தொடரில் ஆடிவருகிறது. 

bcci accepts rahul dravid recommendation

அதற்கு பிறகு இந்திய ஏ அணிக்கு போட்டிகளே இல்லாமல் இருந்தது. அதனால் இளம் வீரர்கள் தொடர்ச்சியாக விளையாட முடியாத நிலை இருந்தது. இளம் வீரர்கள் தங்களது ஆட்டத்திறனை மேம்படுத்தி கொள்ள தொடர்ச்சியாக போட்டிகளில் ஆட வேண்டியது அவசியம். எனவே இந்திய ஏ அணிக்கும், 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கும் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக போட்டிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ராகுல் டிராவிட் பிசிசிஐ-யிடம் கோரியிருந்தார். 

bcci accepts rahul dravid recommendation

ராகுல் டிராவிட்டின் கோரிக்கையை ஏற்று இந்திய ஏ அணி, அதிகமான போட்டிகளில் ஆட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூலை மாத இறுதியில் இந்தியா ஏ, இந்தியா பி, தென்னாப்பிரிக்கா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ ஆகிய அணிகளுக்கு இடையே போட்டிகள் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 

bcci accepts rahul dravid recommendation

அதிகமான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக ஏ மற்றும் பி என இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணிக்கும், ஆஃப்கானிஸ்தான் மற்றும் நேபாளத்துடன் ஆட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios