Asianet News TamilAsianet News Tamil

லிட்டன் தாஸின் அதிரடியால் சொந்த மண்ணில் மண்ணை கவ்விய வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை 2-1 என வங்கதேச அணி வென்றது. டெஸ்ட் தொடரை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடரை வங்கதேசத்திடம் இழந்தது.  

bangladesh win t20 series against west indies
Author
West Indies, First Published Aug 6, 2018, 4:03 PM IST

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடரை இழந்தது. 

வங்கதேச அணி வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடியது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என வெஸ்ட் இண்டீஸ் வென்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என வங்கதேசம் வென்றது. 

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒன்றில் வென்றன. இதையடுத்து தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. 

வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ், வெஸ்ட் இண்டீஸ் அணியின் பவுலிங்கை அடித்து ஆடினார். அதிரடியாக ஆடிய அவர், 32 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசினார் லிட்டன் தாஸ். தமீம் இக்பால்(21), ஷாகிப் அல் ஹாசன்(24), மஹ்மதுல்லா(32) ரன்கள் எடுக்க, அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்களை குவித்தது. 

bangladesh win t20 series against west indies

185 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர். 17.1 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 135 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால், போட்டி அத்துடன் முடித்துக்கொள்ளப்பட்டு, டக்வொர்த் விதிப்படி 19 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி என அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியை அடுத்து டி20 தொடரையும் 2-1 என வங்கதேச அணி வென்றது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios