Asianet News TamilAsianet News Tamil

மல்யுத்தத்தில் மாஸ் காட்டும் இந்தியா!! இறுதி சுற்றில் பஜ்ரங் புனியா.. வெள்ளி உறுதி.. வெல்வாரா தங்கம்..?

ஆசிய போட்டியில் மல்யுத்தம் 65 கிலோ ஃப்ரீஸ்டைலில் இந்தியாவின் பஜ்ரங் புனியா இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அதனால் வெள்ளி பதக்கம் உறுதியாகிவிட்டது. தங்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
 

bajrang punia is in finals of 65 freestyle wrestling in asian games
Author
Indonesia, First Published Aug 19, 2018, 5:49 PM IST

ஆசிய போட்டியில் மல்யுத்தம் 65 கிலோ ஃப்ரீஸ்டைலில் இந்தியாவின் பஜ்ரங் புனியா இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அதனால் வெள்ளி பதக்கம் உறுதியாகிவிட்டது. தங்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இந்தோனேஷியாவின் ஜகர்த்தா மற்றும் பாலேம்பங்கில் ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. துப்பாக்கி சுடுதலில், ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா ஏற்கனவே வெண்கல பதக்கம் வென்றுள்ளது. 

இந்தியா பதக்கம் வெல்ல சிறந்த வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட போட்டிகளில் மல்யுத்தமும் ஒன்று. 74 கிலோ ஃபீரிஸ்டைலில் இந்தியாவின் சுஷில் குமார், பஹ்ரைனின் பேடிரோவிடம் 3-5 என தோல்வியை தழுவினார். 

ஆனால், 65 கிலோ ஃப்ரீஸ்டைலில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, அபாரமாக ஆடி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். முதல் சுற்றில் உஸ்பெஸ்கிஸ்தானின் சிரோஜிடினை 13-3 என வீழ்த்தி காலிறுத்திக்கு தகுதி பெற்றார்.

bajrang punia is in finals of 65 freestyle wrestling in asian games

காலிறுதி:

காலிறுதி சுற்றில், பஜ்ரங் புனியா டஜிகிஸ்தானின் ஃபேய்ஸி அப்துல்கோசிமை எதிர்கொண்டார். அந்த சுற்றிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பஜ்ரங் புனியா, 12-2 என அப்துல்கோசிமை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதி:

அரையிறுதியில் மங்கோலியாவின் பட்சுலுனுடன் பஜ்ரங் மோதினார். இந்த சுற்றில் அபாரமாக ஆடிய பஜ்ரங், பட்சுலுனை ஒரு பாயிண்ட் கூட எடுக்கவிடவில்லை. இந்த சுற்று முழுவதும் ஆதிக்கம் செலுத்திய பஜ்ரங் 10 புள்ளிகளை பெற்றார். பட்சுலுன் ஒரு புள்ளி கூட பெறவில்லை. இதையடுத்து 10-0 என அபாரமாக வென்ற பஜ்ரங் புனியா, இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். 

இறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டதால், பஜ்ரங் புனியா வெள்ளி பதக்கம் வெல்வது உறுதியாகிவிட்டது. தங்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
                  
57 கிலோ ஃப்ரீஸ்டைலில் முதல் சுற்றில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்ற சந்தீப் டோமர் காலிறுதியில் ஈரானின் ரேஸாவிடம் தோல்வியை தழுவினார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios