கஜகஸ்தானின் நூர் சுல்தான் நகரில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. ஆடவருக்கான 65 கிலோஎடைப்பிரிவில் 3-வது இடத்துக்கான போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியாவும், மங்கோலிய வீரர் துல்கா துமுர் ஓசிரும் மோதினர்.

இந்த போட்டியில், துல்கா துமுரை 8-7 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெண்கலம் வென்றார். தொடக்கத்தல் 2-7 என்ற கணக்கில் பூனியா பின்தங்கி இருந்தார். அதன்பின் அவரின் விடாமுயற்சியால் மங்கோலிய வீரரை வீழ்த்தி வெண்கலம் கைப்பற்றினார். பூனியாவுக்கு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இது 3-வது பதக்கமாகும்.

வட கொரியாவின் ஜாங் சங்கை 8-0 என்ற கணக்கில் நேற்று நடந்த போட்டியில் பூனியா வீழ்த்தியதைத் தொடர்்ந்து டோக்கியோவில் 2020-ம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் வாய்ப்பைப் பெற்றார்.

மற்றொரு இந்திய வீரர் கவுசிக் முதல்முறையாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று வெண்கலம் வென்றார். கியூபா நாட்டு வீரர் ஆண்டி கோம்ஸை 0-5என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலத்தை கைப்பற்றினார் கவுசிக்.