சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா, இந்தியா வீழ்த்தியது.

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி நெதர்லாந்தின் பிரெடா நகரில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதல் கோல் வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்தது. 6-வது நிமிடத்திலேயே அந்த அணியின் லச்லான் சார்ப் கோலடித்து இந்திய அணிக்கு ஆட்டம் காட்டினார்.

ஆனால், அதற்கு பதிலடியாக 10-வது நிமிடத்தில் இந்திய வீரர் வருண் குமார் கோலடித்து எதிரணியை தெறிக்க விட்டார்.

எனினும், ஆஸ்திரேலியாவின் டாம் கிரெய்க் 15-வது நிமிடத்தில் கோலடித்து தனது அணியை முன்னிலைப் படுத்தினார். அதனால் இந்தியா தடுமாறியது. 

ஆட்டத்தின் முதல் பாதியில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. 

2-வது பாதியில் ஆஸ்திரேலியாவின் அணி  33-வது நிமிடத்தில் டிரென்ட் மிட்டன் கோலடித்தார்.  58-வது நிமிடத்தில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் மேலும் ஓர் கோல் அடித்தார். எனினும், இறுதியில் ஆஸ்திரேலியா 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது. 

அடுத்ததாக இந்தியா, தனது அடுத்த ஆட்டத்தில் பெல்ஜியத்தை வியாழக்கிழமை சந்திக்கிறது. 

புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா 7 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நெதர்லாந்து 6 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இந்தியா 6 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.