Asianet News TamilAsianet News Tamil

#TokyoOlympics லீக் சுற்று ஹாக்கி: கோல் மழை பொழிந்த ஆஸ்திரேலியா..! படுமோசமாக தோற்ற இந்தியா

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் சுற்று ஹாக்கி போட்டியில் 1-7 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது இந்தியா.
 

australia beats india in tokyo olympics mens hockey in league match
Author
Tokyo, First Published Jul 25, 2021, 5:09 PM IST

டோக்கியோ ஒலிம்பிக்கில் நியூசிலாந்துக்கு எதிரான ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்ற இந்திய ஹாக்கி அணி, லீக் சுற்றின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே கோல் மழை பொழிந்த ஆஸ்திரேலிய அணி, முழுக்க முழுக்க இந்திய அணி மீது ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டம் தொடங்கிய 10வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவிற்கு முதல் கோலை அடித்து கொடுத்தார் வெட்டோன். 

21வது நிமிடத்தில் ஹேவார்டு கோல் அடிக்க, 23வது நிமிடத்தில் ஆஜில்வி ஒரு கோல் அடித்தார். 26வது நிமிடத்தில் பெல்ட்ஸ் ஒரு கோல் அடித்தார். ஆஸ்திரேலியா அடுத்தடுத்து கோல்களை அடித்து கோல் மழை பொழிய, ஒரு கோல் கூட அடிக்காத இந்திய அணிக்கு 34வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து கொடுத்தார் தில்ப்ரீத் சிங். ஆனால் அதுதான் இந்த போட்டியில் இந்திய அணியின் கடைசி கோலும் கூட என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். ஆம்.. அதன்பின்னர் இந்திய அணி கோலே அடிக்கவில்லை.

ஆனால் ஆட்டத்தின் 40வது நிமிடம், 42வது நிமிடம் மற்றும் 51வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணி மேலும் 3 கோல்கள் அடிக்க, இந்திய அணியை 1-7 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios