Asianet News TamilAsianet News Tamil

ஆசிய விளையாட்டு போட்டி... ரோகன் போபண்ணா-திவிஜ் அசத்தல்... இந்தியாவுக்கு 6-வது தங்கம்!

ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது. ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் இணை 6-3, 6-4 என்ற நேர் செட்டில் கஜகஸ்தான் அணியை வென்றது.

Asian Games 2018: Rohan Bopanna-Divij Sharan doubles tennis gold medal
Author
Indonesia, First Published Aug 24, 2018, 12:46 PM IST

ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது. ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் இணை 6-3, 6-4 என்ற நேர் செட்டில் கஜகஸ்தான் அணியை வென்றது.Asian Games 2018: Rohan Bopanna-Divij Sharan doubles tennis gold medal

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று ஆடவருக்கான இரட்டையர் டென்னிஸ் இறுதிப்போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி, கஜகஸ்தான் நாட்டின் பியூப்லிக்-யேவ்சயவ் ஜோடியை எதிர்கொண்டது.

 Asian Games 2018: Rohan Bopanna-Divij Sharan doubles tennis gold medal

தொடக்கத்தில் இருந்த இரு தரப்பும் ஆக்ரோஷ ஆட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மெல்ல மெல்ல இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இந்த வெற்றியின் மூலம் ஆசிய போட்டியில் இந்தியா 6 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. இதுதவிர 4 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios