திடீரென ஓய்வு முடிவு எடுத்தது ஏன்? அடுத்து என்ன பிளான்? சென்னையில் மனம் திறந்து பேசிய அஸ்வின்!

சர்வதேச கிரிக்கெட்டில் திடீரென ஓய்வு முடிவு எடுத்தது ஏன்? அடுத்து என்ன பிளான்? என்பது குறித்து அஸ்வின் சென்னையில் மனம் திறந்து பேசியுள்ளார்.

Ashwin spoken about why he suddenly retire from international cricket ray

இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட் தொடர் நடந்து வரும் நிலையில், தொடரின் பாதியிலேயே அவர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் அஸ்வினை அணியில் எடுக்காததே அவர் ஓய்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெடில் 750 விக்கெட்களுக்கு மேல் அஸ்வின் திடீரென ஓய்வை அறிவித்ததால் ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர். அதே வேளையில் அரசியல், திரையுலக மற்றும் விளையாட்டு பிரபலங்கள் அஸ்வினின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று ஓய்வு முடிவை அறிவித்த அஸ்வின் இன்று ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் வீடு திரும்பிய அவருக்கு ஏராளமான ரசிகர்கள் மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது தாய், தந்தை கட்டித்தழுவி வரவேற்றனர்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வின், ''எனக்கு மிகப்பெரும் வரவேற்பு அளித்த அனைவருக்கும் நன்றி. இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. கடைசியாக 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றபிறகு வீடு திரும்பியதுபோது இதேபோல் வரவேற்பு இருந்தது. ஓய்வு முடிவை அறிவித்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. 

சில நாட்களாகவே ஓய்வு குறித்த எண்ணம் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. நிறைய வீரர்களுக்கு ஓய்வு முடிவை அறிவிப்பது எமோஷனலாக இருக்கும். அதிகமாக உணர்ச்சிவசப்படுவார்கள். ஆனால் எனக்கு இது ஒரு பெரிய நிம்மதி மற்றும் திருப்தியை தருகிறது. நான் மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன். இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தான் ஓய்வு பெற்றுள்ளார். 

எனக்குள் இருக்கும் கிரிக்கெட் வீரர் இன்னும் ஓய்வு பெறவில்லை. என்னால் முடிந்தவரை தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன். ஐபிஎல்லில் சிஎஸ்கேவுக்காக விளையாட போகிறேன். டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வருகிறேன். 30 ஆண்டுகளாக கிரிக்கெட் அகாடமி நடத்தி வருகிறேன். 19 வயதுக்கு உட்பட்ட தமிழ்நாடு வீரர்களிடம் கிரிக்கெட் அனுபவம் பயிற்சி, ஆலோசனையை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்'' என்று தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios