Asianet News TamilAsianet News Tamil

கோலியின் கேப்டன்சியில் அஷ்வின் புதிய சாதனை!! வார்னேவை தொட்ட அஷ்வினால் முரளிதரனை நெருங்க முடியல

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் கேப்டன்சியின் கீழ் ஸ்பின் பவுலர் அஷ்வின் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ashwin new rocrd under kohli captaincy
Author
England, First Published Aug 4, 2018, 4:05 PM IST

கோலியின் கேப்டன்சியில் அஷ்வின் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு அருகில் உள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 84 ரன்களே தேவை. 

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தொடங்கிய இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் அஷ்வின் அசத்தலாக பந்துவீசினார். முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் முதல் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஷ்வின். 

2011ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அஷ்வின், இதுவரை 59 போட்டிகளில்(இந்த போட்டியையும் சேர்த்து) ஆடி, 323 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த போட்டியில் 7 விக்கெட்டுகள் வீழ்த்திய அஷ்வின், புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

கோலியின் கேப்டன்சியின் கீழ் ஆடி 200 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஷ்வின். இதன்மூலம் ஒரு கேப்டனின் கீழ் ஆடி 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அஷ்வின் பெற்றுள்ளார்.

மேலும் ஒரே கேப்டனின் கீழ் விரைவாக 200 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் சுழல் ஜாம்பவான் வார்னேவுடன் இரண்டாவது இடத்தை அஷ்வின் பகிர்ந்துள்ளார். கோலியின் கேப்டன்சியில் 34 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை அஷ்வின் வீழ்த்தியுள்ளார். ஷேன் வார்னே, ரிக்கி பாண்டிங்கின் கேப்டன்சியில் 34 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சானத் ஜெயசூர்யாவின் கேப்டன்சியில் ஆடி 30 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios