இந்திய வீரர்களுக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசி வரும் அர்ஜூன் டெண்டுல்கர், சரியான லைன் மற்றும் லென்த்தில் வீசமுடியாமல் திணறினார்.

19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணி இலங்கைக்கு சென்று விளையாட உள்ளது. இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அங்கு, 4 நாட்கள் நடைபெறும் போட்டிகள் 2 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இந்திய ஜூனியர் அணியும் இலங்கை ஜூனியர் அணியும் மோதுகின்றன.

இதற்கிடையே அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு வலைப்பயிற்சியில் அர்ஜூன் டெண்டுல்கர் பந்து வீசி வருகிறார். அயர்லாந்துக்கு எதிராக 2 டி20 போட்டிகளில் ஆடும் இந்திய அணி, அதன்பிறகு இங்கிலாந்துக்கு சென்று டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் ஆட உள்ளது.

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்காக பயிற்சி மேற்கொண்டுவரும் இந்திய வீரர்களுக்கு வலைப்பயிற்சியில் அர்ஜூன் டெண்டுல்கர் பந்துவீசிவருகிறார். இது அவரை மேம்படுத்தி கொள்ளவும் பயன்படும். அர்ஜூனுக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் பவுலிங் பயிற்சியாளர் ஆகியோரும் ஆலோசனைகளை வழங்குகின்றனர்.

கேப்டன் விராட் கோலிக்கு பந்துவீசிய வீடியோ அண்மையில் வைரலானது. தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவுக்கும் அர்ஜூன் டெண்டுல்கர் பந்துவீசியுள்ளார்.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜூன் டெண்டுல்கர், தோனிக்கும் ரெய்னாவுக்கும் வீசும்போது சரியான லைன் மற்றும் லென்த்தை பிடிக்க முடியாமல் திணறினார். வலைப்பயிற்சியில் ரெய்னாவுக்கு ஆஃப் திசையிலேயே வீச, ரெய்னா ஆஃப் திசையில் பந்துகளை தூக்கி தூக்கி அடித்தார். அதேபோல் தோனிக்கும் எதிர்பார்த்த அளவிற்கு வீசவில்லை.

இது அர்ஜூன் டெண்டுல்கருக்கு தன் மீதே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும். எனினும் 18 வயதே ஆன அர்ஜூனுக்கு, தோனி, கோலி, ரெய்னா போன்ற சீனியர் வீரர்களுக்கு பந்துவீச கிடைத்திருக்கும் வாய்ப்பே அரிதான ஒன்று. அதுமட்டுமல்லாமல் ரவி சாஸ்திரியின் ஆலோசனைகளும் அறிவுரைகளும் அர்ஜூனை வளர்த்துக்கொள்ள உதவும்.

Training ✅

An intense training session for #TeamIndia ahead of the two T20Is against Ireland.#IREvIND pic.twitter.com/sRqE0F1P26
— BCCI (@BCCI) June 26, 2018

தோனி மற்றும் ரெய்னாவுக்கு அர்ஜூன் டெண்டுல்கர் பந்துவீசும் வீடியோவை பிசிசிஐ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.