உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாக் ஔட் சுற்று ஆட்டங்கள் அர்ஜென்டீனா - பிரான்ஸ் இடையே இன்று  நடக்கிறது.

உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாக் ஔட் சுற்று ஆட்டங்கள் அர்ஜென்டீனா - பிரான்ஸ் விடும்யகஸான் நகரில் இன்று நடக்கிறது. 

இதில், பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளான இவ்விரு அணிகளும் முதல் சுற்று தகுதி ஆட்டங்களெ சொல்லும்படியாக அமையவில்லை. அர்ஜென்டீனா குரோஷியாவுடன் படுதோல்வி அடைந்தது. ஐஸ்லாந்துடன் டிரா செய்தது. இறுதியில் நைஜீரியாகவை வீழ்த்தியதால் நாக் ஔட் சுற்றுக்கு தகுதி பெற்றது. 

அதேபோன்று, பிரான்ஸ் அணி தகுதிச் சுற்று ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவையும், பெரு அணியையும் வீழ்த்தியது. டென்மார்க் அணியுடன் சமன் செய்தது. 

பிரான்ஸில் மாப்பே, , ஜிரார்ட், போக்பா போன்ற சிறந்த ஆட்டக்காரர்கள் உள்ளனர். எனினும் சிறந்த தாக்குதல் ஆட்டக்காரரான கிரைஸ்மேன் உள்ளிட்டோர் தனது வழக்கமான திறனுடன் இல்லாதது பிரான்ஸுக்கு பின்னடைவு. 

பிரான்ஸ் தரப்பில் கோலோ கண்டே, ஹெர்ணான்டஸ், உள்ளிட்டோர் மெஸ்ஸியின் ஆட்டத்துக்கு அணை போடும் முனைப்பில் களம் இளமிறக்கப்படுகின்றனர்.

இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி தான் காலிறுதிக்கு முன்னேறும் என்பதால் அர்ஜென்டீனா - பிரான்ஸ் அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.