Asianet News TamilAsianet News Tamil

Andrew Symonds: கார் விபத்தில் பலியான ஆன்ட்ரூ சைமன்ட்ஸுக்கு அஞ்சலி : ட்ரண்டாகும் அமுல் நிறுவனம் டூடுள்

Andrew Symonds : ஆஸ்திரேலியாவில் கார் விபத்தில் உயிரிழந்த ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்ரவுன்டர் ஆன்ட்ரூ சைமன்ட்ஸுக்கு டூடுள் வெளியிட்டு அமுல் நிறுவனம் அஞ்சலி செலுத்தியது.

Andrew Symonds : Amul pays tribute to Australian all-rounder Andrew Symonds in wonderful doodle. Viral post
Author
New Delhi, First Published May 19, 2022, 3:31 PM IST

ஆஸ்திரேலியாவில் கார் விபத்தில் உயிரிழந்த ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்ரவுன்டர் ஆன்ட்ரூ சைமன்ட்ஸுக்கு டூடுள் வெளியிட்டு அமுல் நிறுவனம் அஞ்சலி செலுத்தியது.

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்ன், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருந்தார். அந்த அதிர்ச்சியிலிருந்து ரசிகர்கள் மீள்வதற்குள்குள் கடந்த ஞாயிறுன்று குயின்ஸ்லாந்தில நடந்த சைமன்ட்ஸ் உயிரிழந்தார்.

கார் விபத்தில் திடீரென மரணமடைந்த ஆன்ட்ரூ சைமன்ட்ஸுக்கு பல முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்கள், பிரபலங்கள், முன்னாள் வீரர்கள் எனபலரும் ட்விட்டரில் அஞ்சலி செலுத்தினர். 

 

இந்தியாவின் மிகப்பெரிய பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான அமுல் நிறுவனம் ஆன்ட்ரூ சைமன்ட்ஸுக்கு டூடுள் வெளியிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளது. இந்த டூடுளை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். 

இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் அமுல்நிறுவனம் சைமன்ட்ஸுக்கான டூடுளை வெளியிட்டுள்ளது. கிரிக்கெட்மைதானத்தில் சைமன்ட்ஸ் விளையாடுவது போன்ற காட்சிகள் அந்த டூடுளில்இடம் பெற்றுள்ளன. பந்துவீச்சு, பேட்டிங்,பீல்டிங் என அனைத்திலும் ஜொலித்தவர் ஆன்ட்ரூ சைமன்ட்ஸ். கிரிக்கெட்டின் பிரதிபலிப்பாக சைமன்ட்ஸ் இருந்தார் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios