Asianet News TamilAsianet News Tamil

தங்கம் வென்ற தங்கமகன்கள் சந்திப்பு.. நீரஜிக்கு நாய் குட்டியை பரிசளித்த அபினவ் பிந்த்ரா.. வைரலாகும் புகைப்படம்

 அபினவ் பிந்த்ரா சிறப்பு துப்பாக்கிச் சூடும் வீரர். இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கம் வென்று தந்தவர். அவரை நேரில் சந்தித்தது எனக்கு கனவை போல் உணர்கிறேன். ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவால் பதக்கம் வெல்ல முடியும் என்ற எண்ணத்தை உணர்த்தியவர் அபினவ் பிந்த்ரா.

Abhinav Bindra Meets India Golden Man Neeraj Chopra
Author
Delhi, First Published Sep 22, 2021, 7:24 PM IST

சுதந்திர இந்தியாவின் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ராவை அவரது இல்லத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா சந்தித்தார். 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில், ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்று போட்டியில் அசத்திய இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி வீசி இந்தியாவுக்காக முதல் தங்க பதக்கத்தை வென்று புதிய சாதனையை படைத்தார். வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்த நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து மழை குவிந்த வண்ணம் இருந்து வருகிறது. நீரஜ் சோப்ரா தங்க பதக்கம் வென்ற போது பீஜிங்கில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் ரைபில் துப்பாக்கி சுடுதலில் தங்க பதக்கம், வென்ற அபினவ் பிந்த்ரா டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தார். 

Abhinav Bindra Meets India Golden Man Neeraj Chopra

இந்நிலையில், அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அபினவ் பிந்த்ராவை நீரஜ் சோப்ரா அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் நீரஜ் சோப்ரா பதிவு செய்துள்ளார். அபினவ் பிந்த்ரா டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை போல் 2024ம் ஆண்டு பாரீசில் நடைபெற உள்ள அடுத்த ஓலிம்பிக் போட்டியடிலும் நீரஞ் சோப்ரா சிறப்பாக செயல்படுவார் என்று அபினவ் பிந்த்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அப்போது, அபினவ் பிந்த்ரா தங்க ரெட்ரீவர் நாய் குட்டியை நீரஜ் சோப்ராவுக்கு பரிசளித்து அதற்கு டோக்கியோ என்று பெயரிட்டார்.

Abhinav Bindra Meets India Golden Man Neeraj Chopra

இதனையடுத்து, டுவிட்டரில் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்டனர். அப்போது, நீரஞ் சோப்ரா டுவிட்டர் பதிவில்;- அபினவ் பிந்த்ரா சிறப்பு துப்பாக்கிச் சூடும் வீரர். இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கம் வென்று தந்தவர். அவரை நேரில் சந்தித்தது எனக்கு கனவை போல் உணர்கிறேன். ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவால் பதக்கம் வெல்ல முடியும் என்ற எண்ணத்தை உணர்த்தியவர் அபினவ் பிந்த்ரா. அவருடைய பாதையை பின்பற்றி இந்த வெற்றியை பெற்றேன் என்றார். 

Abhinav Bindra Meets India Golden Man Neeraj Chopra

அதேபோல, அபினவ் பிந்த்ராவும் டுவிட்டரில் நீரஜை பாராட்டியுள்ளார். அன்புள்ள நீரஞ் சோப்ரா. என்னை பற்றி பேசிய வார்த்தைகளுக்கு நன்றி. உங்களுடைய கடின உழைப்பால் மட்டும உங்களால் வெல்ல முடிந்தது. இந்த வெற்றி முழுவதும் உங்களுடையது. அதை நீங்கள் ருசித்து மகிழுங்கள் என்றார். 

Follow Us:
Download App:
  • android
  • ios