இந்தியா - நியூசிலாந்து இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை முறையே இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் வென்றன. இரண்டு தொடர்களும் முடிந்த நிலையில், அடுத்ததாக டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது. 

2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிகள், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால், 2 அணிகளுமே இதில் வெல்லும் தீவிரத்தில் உள்ளன. 

முதல் போட்டி நாளை வெலிங்டனில் தொடங்குகிறது. இந்த போட்டியில் தொடக்க வீரர்களாக மயன்க் அகர்வாலும் பிரித்வி ஷாவும் இறங்குவார்கள். ரோஹித் சர்மா காயத்தால் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியதால், மயன்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக இறங்கப்போவது பிரித்வி ஷாவா அல்லது ஷுப்மன் கில்லா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் பிரித்வி ஷா தான் பயிற்சி போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் தொடக்க வீரராக இறக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல் ஷுப்மன் கில்லுக்கு முன்பே இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தவரும் அவரே. அவர் நல்ல ஃபார்மிலும் இருக்கிறார். எனவே அவர் தான் தொடக்க வீரராக இறங்குவார். 

அதன்பின்னர் புஜாரா, கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி, விக்கெட் கீப்பர் ரிதிமான் சஹா என்ற வழக்கமான பேட்டிங் ஆர்டர். ஒரு ஸ்பின் பவுலர் மட்டுமே இருப்பார். அது அஷ்வினாகத்தான் இருக்கும். ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ் ஆகிய மூவரும் ஆட வாய்ப்புள்ளது. பும்ரா - ஷமி காம்பினேஷன் உறுதி. எஞ்சிய ஒரு ஃபாஸ்ட் பவுலருக்கான இடத்திற்கு உமேஷ் தான் முதன்மை சாய்ஸாக இருப்பார். இஷாந்த் சர்மா இப்போதுதான் காயத்திலிருந்து குணமடைந்து வந்திருக்கிறார். எனவே ஃபிட்னெஸை கருத்தில் கொண்டு உமேஷுக்குத்தான் வாய்ப்பளிக்கப்படும். 

Also Read - ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கிரிக்கெட்டின் முகத்தை மாற்றிய 3 பேட்ஸ்மேன்கள் இவங்கதான்.. இன்சமாம் உல் ஹக் அதிரடி

நவ்தீப் சைனி டெஸ்ட் அணியில் எடுக்கப்பட்டிருந்தாலும் அவருக்கும் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே பும்ரா மற்றும் ஷமியுடன் உமேஷ் யாதவ் தான் இணைந்து மூன்றாவது ஃபாஸ்ட் பவுலராக உமேஷ் தான் ஆடுவார். இஷாந்த் மற்றும் நவ்தீப் சைனிக்கு வாய்ப்பில்லை.  

முதல் டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

மயன்க் அகர்வால், பிரித்வி ஷா, புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே, ஹனுமா விஹாரி, ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), அஷ்வின், உமேஷ் யாதவ், ஷமி, பும்ரா.