ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்று, பல்வேறு டி20 லீக் தொடர்களில் ஆடிவருகிறார். ஐபிஎல், பாகிஸ்தான் சூப்பர் லீக் உள்ளிட்ட தொடர்களில் ஆடிவருகிறார். 

ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடிவரும் ஷேன் வாட்சன், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் ஆடுகிறார். ஷேன் வாட்சன் ஆடும் கிளாடியேட்டர்ஸ் அணிதான் கடந்த சீசனில் டைட்டிலை வென்றது. 

ஷேன் வாட்சன் 12 போட்டிகளில் 43 ரன்கள் என்ற சராசரியுடன் 430 ரன்களை குவித்து, தொடர் நாயகன் விருதை வென்றார். இந்த சீசன் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. அதற்காக பாகிஸ்தான் சென்றுள்ள ஷேன் வாட்சன், தான் வலைப்பயிற்சியில் எதிர்கொண்டதிலேயே, முகமது ஹஸ்னைனின் பவுலிங் தான் கடினமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். 

Also Read - சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் சச்சினை வச்சு செய்யும் தாதா.. டெண்டுல்கரின் காலை வாரிய கங்குலி

ஷேன் வாட்சன் ஆடும் அதே கிளாடியேட்டர்ஸ் அணியில் தான் ஹஸ்னைனும் ஆடுகிறார். கடந்த சீசனின் ஃபைனலில் அவர் வீழ்த்திய 3 விக்கெட்டுகள், அந்த அணி டைட்டிலை வெல்ல முக்கிய காரணமாக இருந்தது. அதன்பின்னர் பாகிஸ்தான் அணிக்கு தேர்வான ஹஸ்னைன், உலக கோப்பை அணியிலும் இடம்பிடித்தார். ஆனால் அவர் உலக கோப்பையில் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.