Asianet News TamilAsianet News Tamil

நியூசிலாந்து பவுலர்களால் முடிந்தது, இந்திய பவுலர்களால் ஏன் முடியல..? இதுதான் காரணம்

நியூசிலாந்து பவுலர்கள், இந்திய வீரர்களின் மீது ஆதிக்கம் செலுத்தி விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், இந்திய பவுலர்களால் அது முடியாததற்கான காரணத்தை சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.
 

sanjay manjrekar compares indian and new zealand bowling attack plan in first test
Author
Wellington, First Published Feb 23, 2020, 5:33 PM IST

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள், நியூசிலாந்து அணியின் திட்டமிடப்பட்ட மற்றும் அபாரமான ஃபாஸ்ட் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். 

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 165 ரன்கள் மட்டுமே அடித்தது. முதல் இன்னிங்ஸில் மயன்க் அகர்வாலும் ரஹானேவும் மட்டுமே ஓரளவிற்கு நிலைத்து நின்று சிறப்பாக பேட்டிங் ஆடினர். அவர்கள் இருவரைத்தவிர மற்ற அனைவருமே திணறினர். கோலி, புஜாரா ஆகிய ஜாம்பவான் பேட்ஸ்மேன்களே கூட, நியூசிலாந்து அணியின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

sanjay manjrekar compares indian and new zealand bowling attack plan in first test

ஆனால் நியூசிலாந்து வீரர்களோ இந்திய அணியின் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு ஆடினர். வில்லியம்சன் 89 ரன்களையும் டெய்லர் 44 ரன்களையும் அடித்தனர். காலின் டி கிராண்ட் ஹோம் 43 ரன்களும் அறிமுக வீரர், அதுவும் ஃபாஸ்ட் பவுலர் கைல் ஜாமிசன் 44 ரன்களும் டிரெண்ட் போல்ட் 38 ரன்களும் அடித்து அசத்தினர். 225 ரன்களுக்கே நியூசிலாந்து அணியின் 7 விக்கெட்டுகளை இந்திய அணி வீழ்த்திவிட்ட நிலையில், எட்டாவது விக்கெட்டுக்கு டி கிராண்ட் ஹோமுடன் இணைந்து அடித்து ஆடி ஸ்கோர் செய்தார் கைல் ஜாமிசன். ஒரு பவுலரான அவரது அதிரடியை கூட கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பவுலர்கள் நிராயுதபாணியாக நின்றனர். அதேபோல கடைசி வீரராக களத்திற்கு வந்த டிரெண்ட் போல்ட், 24 பந்தில் 38 ரன்களை குவித்து, நியூசிலாந்து அணி 348 ரன்களை எட்ட உதவினார். 

sanjay manjrekar compares indian and new zealand bowling attack plan in first test

கைல் ஜாமிசன், டிரெண்ட் போல்ட் ஆகிய பவுலர்களைக்கூட வீழ்த்த முடியாமல் அவர்கள் இருவரும் சேர்ந்து 82 ரன்களை அடிக்க அனுமதித்தனர் இந்திய பவுலர்கள். நியூசிலாந்து பவுலர்கள், கோலி, புஜாரா போன்ற ஜாம்பவான்கள் மீதே ஆதிக்கம் செலுத்திய நிலையில், இந்திய பவுலர்களால் நியூசிலாந்து பவுலர்களை கூட வீழ்த்த முடியவில்லை. 

இரண்டாவது இன்னிங்ஸிலுமே பிரித்வி ஷா மற்றும் கோலி ஆகியோரை பக்காவாக திட்டம்போட்டு, அவர்களை ஆடவைத்து, அவர்களது விக்கெட்டுகளை வீழ்த்தினர் நியூசிலாந்து பவுலர்கள். குறிப்பாக டிரெண்ட் போல்ட் அதை சிறப்பாக செய்தார். பிரித்வி ஷாவிற்கு, ஷார்ட் ஸ்கொயர் லெக் திசையில் ஃபீல்டிங் செட் செய்து விட்டு லெக் திசையில் ஷார்ட் பிட்ச் பந்தை வீசினார். போல்ட் திட்டமிட்டதை போலவே அதை ஷார்ட் ஸ்கொயர் லெக் திசையில் பிரித்வி ஷா அடிக்க, அதை டாம் லேதம் கேட்ச் பிடித்தார். அதேபோல கோலிக்கும் ஷார்ட் பிட்ச் பந்தை ஸ்லோவாக வீசி விக்கெட்டை வீழ்த்தினார் டிரெண்ட் போல்ட். 

sanjay manjrekar compares indian and new zealand bowling attack plan in first test

இதன்மூலம் நியூசிலாந்து அணி, களத்திற்கு வருவதற்கு முன்பே, எந்தெந்த இந்திய வீரரை எப்படி வீழ்த்த வேண்டும் என்று ஒரு விரிவான மற்றும் தெளிவான திட்டங்களுடன் வந்தது என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. 

Also Read - எப்படி பேட்டிங் ஆடணும்னு கோலி புஜாராலாம் அந்த பையனை பார்த்து தெரிஞ்சுக்கங்க.. முன்னாள் ஆல்ரவுண்டர் அதிரடி

இதுகுறித்து பேசிய முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர், நியூசிலாந்து அணியில் பவுலர்கள் தனிப்பட்ட முறையில் திட்டங்களை தீட்டவில்லை. ஒரு அணியாக இணைந்து ஆலோசனை செய்து, இந்திய வீரர்களுக்கு எதிராக திட்டங்களை வகுத்துள்ளனர். ஆனால் இந்திய அணியில் இஷாந்த் சர்மாவோ, ஷமியோ அல்லது பும்ராவோ, அவரவர்களாக திட்டங்களை வகுத்து, அதற்கேற்ப பந்துவீசினர். அணியாக இணைந்து திட்டமிட்டு, அதை பவுலர்கள் களத்தில் சரியாக செயல்படுத்தியதால்தான் நியூசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்துகிறது. நியூசிலாந்து பவுலர்கள், அவர்கள் அணி வகுத்த திட்டங்களிலிருந்து எந்த சூழலிலும் பின் வாங்காமல் அதை தொடர்ந்து செயல்படுத்துகின்றனர். பிட்ச் ஸ்லோவான நிலையில், ஸ்லோவாக பவுன்ஸர்களை வீசி இந்திய வீரர்களுக்கு நெருக்கடியளிக்கின்றனர். அதுவே இந்திய வீரர்களுக்கு பிரச்னையாகவும் அமைந்துவிட்டது என்று மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios