Asianet News TamilAsianet News Tamil

ஐபிஎல் 2020ன் நாயகன் இவர்தான்.. கேகேஆர் அணியின் சூப்பர் செலக்‌ஷன்.. வீடியோவை பாருங்க

ஐபிஎல் 13வது சீசனில் கேகேஆர் அணியால் அடிப்படை விலைக்கு எடுக்கப்பட்டுள்ள ஒரு வீரர் தான், அடுத்த சீசனில் மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருக்கப்போகிறார். 

kolkata knight riders purchase of tom banton will big surprise in ipl 2020
Author
Kolkata, First Published Dec 21, 2019, 10:35 AM IST

ஐபிஎல் 13வது சீசனுக்கான ஏலம் கடந்த 19ம் தேதி நடந்தது. இந்த ஏலத்தில் பாட் கம்மின்ஸ் அதிகபட்சமாக ரூ.15.5 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் எடுக்கப்பட்டார்.

கம்மின்ஸுக்கு அடுத்த அதிகபட்ச தொகையான ரூ.10.75 கோடிக்கு மேக்ஸ்வெல்லை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எடுத்தது. தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸை ரூ.10 கோடிக்கு ஆர்சிபி அணியும் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டான் கோட்ரெலை ரூ.8.5 கோடிக்கு பஞ்சாப் அணியும் எடுத்தன.

kolkata knight riders purchase of tom banton will big surprise in ipl 2020

ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் நாதன் குல்ட்டர் நைலை ரூ.8 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. வெஸ்ட் இண்டீஸின் அதிரடி பேட்ஸ்மேன் ஷிம்ரான் ஹெட்மயரை ரூ.7.75 கோடிக்கு டெல்லி கேபிடள்ஸ் அணி எடுத்தது. 

kolkata knight riders purchase of tom banton will big surprise in ipl 2020

இவ்வாறு சர்வதேச கிரிக்கெட்டில் ஆடி நல்ல அறிமுகமுள்ள பிரபலமான வீரர்களை ஐபிஎல் அணிகள் கடும் போட்டி போட்டு அதிகமான விலைக்கு எடுத்துள்ள நிலையில், கேகேஆர் அணி அபாரமான ஒரு வீரரை ஒரு கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது. அதிகமான விலை கொடுத்து பாட் கம்மின்ஸை எடுத்த கேகேஆர் அணி தான் டாம் பாண்ட்டன் என்ற இங்கிலாந்து அதிரடி பேட்ஸ்மேனை ஒரு கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது. 

kolkata knight riders purchase of tom banton will big surprise in ipl 2020

இங்கிலாந்து அணியின் இளம் அதிரடி வீரரான டாம் பாண்ட்டனின் வயது 21 தான். நியூசிலாந்துக்கு எதிராக அண்மையில் நடந்த டி20 தொடரில் தான் இங்கிலாந்து அணியில் அறிமுகமானார். அந்த தொடரில் பெரிதாக சோபிக்கவில்லையென்றாலும், அதிரடியாக ஆடக்கூடிய திறமையான வீரர் அவர். 

ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் டி20 லீக் தொடரான பிக்பேஷ் லீக்கில் பிரிஸ்பேன் ஹீட் அணியில் ஆடிவரும் டாம் பாண்ட்டன், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தெறிக்கவிட்டுள்ளார். மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மெல்போர்ன் அணி 20 ஓவரில் 167 ரன்கள் அடித்தது. மெல்போர்ன் அணியின் கேப்டனும் அதிரடி பேட்ஸ்மேனுமான மேக்ஸ்வெல், அதிரடியாக ஆடி 39 பந்தில் 83 ரன்களை குவித்தார். அவரது அதிரடியால் 167 ரன்களை குவித்தது மெல்போர்ன் அணி.

kolkata knight riders purchase of tom banton will big surprise in ipl 2020

168 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பிரிஸ்பேன் ஹீட் அணியில், டாம் பாண்ட்டன் மட்டுமே அபாரமாக ஆடினார். அவரைத்தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை. இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய டாம் பாண்ட்டன் 36 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 64 ரன்களை குவித்தார். ஆஸ்திரேலிய மைதானங்கள் மிகவும் பெரியவை. அதில் சிக்ஸர் அடிப்பதே பெரிய விஷயம். அப்படியிருக்கையில், அதில் மிகப்பெரிய சிக்ஸர்களை விளாசி மிரட்டியிருக்கிறார் பாண்ட்டன். அவர் அடித்ததில் ஒரு சிக்ஸர் 102 மீட்டர் தொலைவில் சென்று விழுந்தது. அதுமாதிரி ஷாட்டை, அவரை ஏலத்தில் எடுத்துள்ள கேகேஆர் அணிக்காக, கொல்கத்தா ஈடன் கார்டனில் அடித்தால் ஸ்டேடியத்திற்கு வெளியேற் சென்றுவிடும். அந்த அபாரமான சிக்ஸரின் வீடியோ இதோ.. 

புல் ஷாட், ரிவர்ஸ் ஸ்வீப் என பல வகையான ஷாட்டுகளை நேர்த்தியாக ஆடி தெறிக்கவிட்டுள்ளார் டாம் பாண்ட்டன். பிரபலமான, நன்கு அறிமுகமான வீரர்களை மற்ற அணிகள் கோடி கோடியாய் கொட்டிக்கொடுத்து எடுத்துள்ள நிலையில், இந்த 21 வயதான இளம் டாம் பாண்ட்டன் தான், அடுத்த ஐபிஎல் சீசனின் மிகவும் எதிர்பார்க்கக்கூடிய வீரராக திகழ்கிறார். 

Follow Us:
Download App:
  • android
  • ios