Asianet News TamilAsianet News Tamil

அவரை விட்டுட்டு இவரை ஏன்ப்பா டீம்ல எடுத்தீங்க? அணி தேர்வை கடுமையாக சாடிய எக்ஸ்பர்ட்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான அணி தேர்வை கடுமையாக சாடியுள்ளார் கிரிக்கெட் வர்ணனையாளரும் எக்ஸ்பர்ட்டுமான ஹர்ஷா போக்ளே. 
 

harsha bhogle criticises rishabh pant selection over saha in team india playing eleven for first test
Author
Wellington, First Published Feb 21, 2020, 2:07 PM IST

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்துவருகிறது. இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வெலிங்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணி குறித்த எதிர்பார்ப்பு வெகுவாக எழுந்திருந்தது. 

பேட்டிங் ஆர்டர், ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் ஆகிய இரண்டும் உறுதியாகியிருந்த நிலையில் ஸ்பின்னர் மற்றும் விக்கெட் கீப்பராக யார் இறங்குவார்கள் என்ற கேள்வி மட்டும் இருந்தது. அஷ்வின் - ஜடேஜா ஆகிய இருவரில் யார் ஸ்பின் பவுலராக இறங்குவார் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் ஸ்பின் பவுலிங்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து அஷ்வின் அணியில் எடுக்கப்பட்டார். 

harsha bhogle criticises rishabh pant selection over saha in team india playing eleven for first test

அதேபோல விக்கெட் கீப்பராக ரிதிமான் சஹா இறங்குவாரா அல்லது ரிஷப் பண்ட் இறங்குவாரா என்ற சந்தேகம் இருந்தது. இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் சஹா சேர்க்கப்பட்டார். இந்திய ஆடுகளங்களில் பந்து நன்றாக சுழன்று திரும்பும் என்பதால், ஸ்பின் பவுலிங்கை விக்கெட் கீப்பிங் செய்ய அனுபவமான விக்கெட் கீப்பர் தேவையென்ற வகையில் சஹா எடுக்கப்பட்டதாக அப்போதே விளக்கமளிக்கப்பட்டது. 

எனவே வெளிநாடுகளில் ஆடும்போது பேட்டிங்கிற்கு முன்னுரிமை அளிக்கும்வகையில் தான் விக்கெட் கீப்பிங் தேர்வு இருக்கும் என்பதை கணிக்க முடிந்தது. அந்தவகையில், சஹாவை விட ரிஷப் பண்ட் சிறந்த பேட்ஸ்மேன் என்பதால், அவரே இந்த போட்டியில் விக்கெட் கீப்பராக எடுக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் தனது முதல் சுற்றுப்பயணத்திலேயே டெஸ்ட் போட்டியில் சதமடித்துள்ளார். எனவே பேட்டிங்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து விக்கெட் கீப்பர் தேர்வு செய்யப்பட்டதால் ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடித்தார். 

harsha bhogle criticises rishabh pant selection over saha in team india playing eleven for first test

ஆனால் சஹாவை உட்காரவைத்துவிட்டு ரிஷப் பண்ட்டை எடுத்ததற்கான காரணத்தை கேப்டன் கோலி சொல்லவில்லை. இந்நிலையில், சஹாவை எடுக்காமல் ரிஷப் பண்ட்டை  அணியில் எடுத்ததை ரசிக்காத ஹர்ஷா போக்ளே, தனது அதிருப்தியை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்து பதிவிட்டுள்ள பதிவிட்டுள்ள டுவீட்டில், தூங்கி எழுந்ததும் சஹா எடுக்கப்படவில்லை என்பதை பார்த்தேன். இந்திய அணியில் இப்போது இருக்கும் இளம் விக்கெட் கீப்பர்களிடம், விக்கெட் கீப்பிங்கில் சிறந்து விளங்குங்கள் என்று சொல்லாமல், பேட்டிங்கில் கூடுதலாக ரன்களை சேர்க்க வேண்டும் என்று சொல்வது அதிருப்தியளிக்கிறது. 

நான் சொல்வதை தவறான அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளாதீர்கள். இது ரிஷப் பண்ட்டை பற்றிய விஷயம் அல்ல. டெஸ்ட் போட்டிகளில் ஆடும்போது, மிகச்சிறந்த 5 பேட்ஸ்மேன்கள் மற்றும் சிறந்த 4 பவுலர்கள் ஆகியோருடன் விக்கெட் கீப்பிங்கில் மிகவும் திறமை வாய்ந்தவரைத்தான் எடுக்க வேண்டும். ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு கிடைத்த வரப்பிரசாதம் தான். ஆனால் சஹாவிற்காக நான் வருந்துகிறேன் என்று பதிவிட்டிருந்தார். 

ரிஷப் பண்ட் அணியில் இருப்பாரேயானால், அவரை கண்டிப்பாக ஆடும் லெவனில் எடுக்கலாம். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல ரெக்கார்டும் வைத்திருக்கிறார் என்று ஒருவர், ஹர்ஷாவிற்கு பதிலளித்திருந்தார். 

அவரது கருத்துக்கு பதிலளித்த ஹர்ஷா, ரிஷப் பண்ட் மோசமான வீரர் என்று நான் சொல்லவில்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில், அந்தந்த விஷயங்களில் கைதேர்ந்த திறமையான வீரர்களைத்தான் அணியில் எடுக்க வேண்டும். ரிஷப் பண்ட் வல்லமை பெற்று சிறந்து விளங்க இன்னும் டைம் இருக்கிறது. அவர் நிறைய ரன்களை அடிக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடும்போது, பேட்டிங், பவுலிங், விக்கெட் கீப்பிங் என அனைத்திலுமே சிறந்தவர்களைத்தான் அணியில் எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios