முன்னாள் வீரர்கள் - இந்நாள் வீரர்கள் என்ற பேதமில்லாமல் பலரும் ஆல்டைம் சிறந்த லெவன் அணிகளை தேர்வு செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் அதிரடி தொடக்க பேட்ஸ்மேனான ஃபகார் ஜமான், ஆல்டைம் பெஸ்ட் டி20 லெவன் வீரர்களை தேர்வு செய்துள்ளார். 

அதிரடி வீரர்கள் ஏபி டிவில்லியர்ஸ், ரோஹித் சர்மா, ஜேசன் ராய் ஆகியோரை டாப் ஆர்டர்களாக தேர்வு செய்துள்ளார் ஃபகார் ஜமான். மிடில் ஆர்டரில் பாகிஸ்தான் அணியின் சீனியர் வீரர் ஷோயப் மாலிக், க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் விக்கெட் கீப்பராக ஜோஸ் பட்லர் ஆகியோரை தேர்வு செய்துள்ள ஃபகார் ஜமான், ஆல்ரவுண்டர்களாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் பொல்லார்டு ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். 

ஃபாஸ்ட் பவுலர்களாக மிட்செல் ஸ்டார்க் மற்றும் பும்ரா ஆகிய இருவரையும் ஸ்பின்னராக ரஷீத் கானையும் தேர்வு செய்துள்ளார்.

இந்த ஆல்டைம் பெஸ்ட் லெவனில் தனது சக வீரரும் டி20 தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக திகழும் பாபர் அசாம், சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களான விராட் கோலி, ஸ்மித் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன்களான வார்னர், தோனி ஆகியோரை ஃபகார் ஜமான் சேர்க்கவில்லை. 

Also Read - மகளிர் டி20 உலக கோப்பை: கடைசி பந்துவரை பரபரப்பு.. நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி

ஃபகார் ஜமான் தேர்வு செய்த ஆல்டைம் பெஸ்ட் டி20 அணி:

ரோஹித் சர்மா, ஜேசன் ராய், டிவில்லியர்ஸ், ஷோயப் மாலிக், க்ளென் மேக்ஸ்வெல், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், பொல்லார்டு, ரஷீத் கான், மிட்செல் ஸ்டார்க், பும்ரா.