Asianet News TamilAsianet News Tamil

ராகுல் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பர்.. உறுதி செய்த கேப்டன் கோலி.. ரிஷப் பண்ட்டுக்கு ஆப்பு

கேஎல் ராகுலே அடுத்த சில போட்டிகளிலும் விக்கெட் கீப்பிங் செய்வார் என்று கூறி ரிஷப் பண்ட்டுக்கான கதவை நச்சுனு மூடிவிட்டார் கேப்டன் கோலி.
 

captain virat kohli confirms kl rahul will be continue as wicket keeper
Author
Bengaluru, First Published Jan 20, 2020, 10:41 AM IST

ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டுமே திருப்தியளிக்காத வகையில் இருந்ததால் அவர்மீது விமர்சனங்கள் இருந்துவந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பேட்டிங் ஆடும்போது தலையில் பந்து பட்டதால், அந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. 

எனவே அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்தார் ராகுல். இதையடுத்து இரண்டாவது போட்டியிலும் அவர் மிகச்சிறப்பாக கீப்பிங் செய்யவே, மூன்றாவது போட்டியில் ஆட ரிஷப் பண்ட் உடற்தகுதியுடன் இருந்தும்கூட ஓரங்கட்டப்பட்டார். பெங்களூருவில் நேற்று நடந்த கடைசி போட்டியிலும் கூட ராகுலே விக்கெட் கீப்பிங் செய்தார். 

captain virat kohli confirms kl rahul will be continue as wicket keeper

ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வதால், கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை அணியில் எடுப்பதற்கான வாய்ப்பு இருப்பதால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் முனைப்பில் உள்ளது இந்திய அணி நிர்வாகம். அதை கேப்டன் விராட் கோலியே தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை 2-1 என வென்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலி, இதுகுறித்து பேசினார். அப்போது, ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வது கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை அணியில் சேர்த்து பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்த வழிசெய்கிறது. அவர் நன்றாக விக்கெட் கீப்பிங் செய்துள்ளார். ராகுலே விக்கெட் கீப்பராக தொடர்வது சரிவருகிறதா என்று பரிசோதிக்க வேண்டும். அதற்குள்ளாக அவசரப்பட்டு மாற்றங்களை செய்ய தேவையில்லை. இப்போது ஆடிய பிளேயிங் லெவனை மாற்ற வேண்டியதற்கு அவசியம் இருப்பதாக கருதவில்லை. 

captain virat kohli confirms kl rahul will be continue as wicket keeper

அணியின் பேலன்ஸ் தான் முக்கியம். 2003 உலக கோப்பையில் ராகுல் டிராவிட் விக்கெட் கீப்பிங் செய்ததால், அணியின் பேலன்ஸ் நன்றாக இருந்தது. கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை அணியில் சேர்க்க முடிந்தது. அதேபோல் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வதால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்க்க முடிகிறது. ராகுல் எந்த பேட்டிங் ஆர்டரிலும் இறங்க தயாராக இருக்கிறார். எந்த வரிசையில் இறக்கினாலும் அதற்கு அர்த்தம் சேர்க்கும் வகையில் சிறப்பாக பேட்டிங் ஆடுகிறார். எனவே இப்போதைக்கு அவரே விக்கெட் கீப்பிங் செய்வார். அவரை மாற்றுவதற்கான அவசியமே இல்லை என்று கோலி தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios