Asianet News TamilAsianet News Tamil

டாம் பிளண்டெலின் போராட்ட சதம் வீண்.. பாக்ஸிங் டே டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

பாக்ஸிங் டே டெஸ்ட்டில் நியூசிலாந்து நியூசிலாந்து அணியை 247 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. 
 

australia beat new zealand by 247 runs in boxing day test
Author
Melbourne VIC, First Published Dec 29, 2019, 12:44 PM IST

நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியிலும் அபார வெற்றி பெற்று 2-0 என தொடரை வென்றது ஆஸ்திரேலியா. 

கடந்த 26ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, டிராவிஸ் ஹெட்டின் அபார சதம், ஸ்மித் - லபுஷேன் - டிம் பெய்ன் ஆகியோரின் பொறுப்பான அரைசதம் ஆகியவற்றின் விளைவாக, முதல் இன்னிங்ஸில் 467 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணியில் யாருமே சரியாக பேட்டிங் ஆடவில்லை. அந்த அணியின் நட்சத்திர வீரர்களான வில்லியம்சன், டெய்லர், ஹென்ரி நிகோல்ஸ் ஆகிய அனைவருமே சொதப்பினர். டாம் லேதம் அடித்த அரைசதத்தால் அந்த அணி 148 ரன்கள் அடித்தது. இல்லையெனில் அதைக்கூட அடித்திருக்க முடியாது.

australia beat new zealand by 247 runs in boxing day test

319 ரன்கள் முன்னிலை என்ற வலுவான நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து மொத்தமாக 487 ரன்கள் முன்னிலை பெற்று, 488 ரன்கள் என்ற கடின இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்தது. 

மிக மிக கடினமான இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள், ஜேம்ஸ் பாட்டின்சனின் வேகத்தை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த டாம் லேதம் 8 ரன்களிலும் கேப்டன் கேன் வில்லியம்சன் ரன்னே அடிக்காமலும் அவுட்டாக, டெய்லர் 2 ரன்னில் நடையை கட்டினார். இவர்கள் மூவருமே ஜேம்ஸ் பாட்டின்சனிடம் விக்கெட்டை பறிகொடுத்தனர். 

Also Read - களத்தில் ஸ்டோக்ஸ் - ஸ்டூவர்ட் பிராட் கடும் வாக்குவாதம்.. நமக்கு எதுக்கு வம்புனு நைஸா நழுவிய கேப்டன் ரூட்.. வீடியோ

33 ரன்கள் அடித்த ஹென்ரி நிகோல்ஸை நாதன் லயன் வீழ்த்தினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார் தொடக்க வீரர் டாம் பிளண்டெல். மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் அடித்துள்ளது. டாம் பிளண்டெல் 76 ரன்களுடனும் வாட்லிங் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

australia beat new zealand by 247 runs in boxing day test

345 ரன்கள் பின் தங்கிய நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே வாட்லிங்கை 22 ரன்களில் வெளியேற்றிய நாதன் லயன், அதன்பின்னர் காலின் டி கிராண்ட் ஹோம், மிட்செல் சாண்ட்னெர் ஆகியோரையும் வீழ்த்தினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று சிறப்பாக ஆடிய, தொடக்க வீரர் டாம் பிளண்டெல் சதமடித்தார். ஆனாலும் மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்ததால் அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. கடைசி விக்கெட்டாக டாம் பிளண்டெல் ஆட்டமிழக்க, இரண்டாவது இன்னிங்ஸில் 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது நியூசிலாந்து அணி.

இதையடுத்து 247 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-0 என தொடரை வென்றது. மேலும் இந்த வெற்றிக்கு 40 புள்ளிகளை பெற்ற ஆஸ்திரேலிய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 256 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. முதலிடத்தில் 360 புள்ளிகளுடன் இந்திய அணி நீடிக்கிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios