Asianet News TamilAsianet News Tamil

எந்த மலர்களை பூஜைக்கு பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

வீட்டில் நாம் பூஜை செய்வதற்கு முன்பாக இறைவனுக்கு மலர் சூடுவோம். அதன்பின் பூஜை செய்யும் போது இறைவனுக்கு மலர்களால் அர்ச்சனை செய்வோம். இப்படி பூஜை நேரங்களில் பலவகையான மலர்களை பயன்படுத்துவது வழக்கம்.

Do you know which flowers should be used for puja?
Author
First Published Sep 16, 2022, 8:38 PM IST

இறைவனுக்கு மலர் அலங்காரம் மிக பிரசித்தம். அபிஷேகப்பிரியரான  பிள்ளையார் போன்று மலர் அலங்காரங்கள் எல்லா இறைவனுக்கும் பிடிக்கும். மற்ற அலங்காரங்களை காட்டிலும் மலர் அலங்காரங்கள் கடவுளை இன்னும் இன்னும் அழகாக நமக்கு காட்டும். கோயில்களில் மலர் அலங்காரம் போன்று வீடுகளிலும் இறைவ்னை அலங்கரிக்கலாம். ஆனால் இறைவனுக்கு உகந்த மலர்கள் என்று உண்டு. 

இறைவனுக்கு எல்லா மலர்களை கொண்டும் பூஜை செய்யலாமா என்றால் நிச்சயம் கூடாது. பூஜையில் பயன்படுத்தக்கூடிய மலர்கள் எப்படி இருக்க வேண்டும்?  என்னென்ன மலர்களை  பயன்படுத்தலாம். எந்தெந்த மலர்களை எல்லாம் நாம் பயன்படுத்த கூடாது? என்ற பல தகவல்களையும், காரணங்களையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. 

முதலில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் மலர்கள் அன்றைய தினம் பூத்த மலர்களாக இருந்திட வேண்டும். தாமரை போன்று நீரில் பூத்த மலர்களாக இருந்தால் இதில் விதி விலக்கு உண்டு. செடியில் பூத்து தரையில் விழுந்த மலர்கள் பூஜைக்கு உகந்தது, பூச்சி கடித்தது போன்ற மலர்களையும் நிச்சயம் பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது.  அதே போல் ஒரு முறை கடவுளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை எடுத்து மீண்டும் அர்ச்சனை செய்திடக் கூடாது. இதில் துளசி மற்றும் வில்வத்திற்கும் விதி விலக்கு உண்டு.

ராகு கேது தோஷம் இருக்கா.. இதை செய்யுங்க!

விஷ்ணு சம்பந்தப்பட்ட கடவுளுக்கு மட்டும் துளசியால் பூஜை செய்து கொள்ளலாம். விநாயகர் சதுர்த்தி தவிர மற்ற நாட்களில் விநாயகருக்கு துளசியால் பூஜை செய்திடக் கூடாது. அதே போல் சிவன் சம்பந்தப்பட்ட கடவுளுக்கு வில்வார்ச்சனை விசேஷம் ஆனது. தும்பை, வெள்ளெருக்கு, கொன்றை, ஊமத்தை கொண்டு அர்ச்சிக்கலாம். துளசி, வில்வம், மருக்கொழுந்து, தாமரை, செண்பகம், மகிழம், நாயுருவி, அருகு, நெல்லி, விஷ்ணுக்ராந்தி ஆகியவற்றின் இலைகள் பூஜைக்கு உகுந்தவை.

வீட்டில் பூஜை செய்யும் போது கண்டிப்பாக இருக்க வேண்டிய பொருள்கள்..!

அதேபோன்று சரஸ்வதிக்கு பவளமல்லி பயன்படுத்தக்கூடாது. லட்சுமிக்குத் தும்பை மலரை பயன்படுத்தக்கூடாது. சிவனுக்குத் தாழம்பூ பயன்படுத்தக்கூடாது. விஷ்ணுவுக்கு அட்சதையால் அர்ச்சனை செய்திட கூடாது. துளுக்க சாமந்திப்பூ அர்ச்சனைக்கு ஏற்றதல்ல. அதே போல் மலரை இதழ் இதழாக அர்ச்சனை செய்திடக்கூடாது. செண்பக மொட்டு தவிர மற்ற மலர்களின் மொட்டுக்கள் பூஜைக்கு உகந்தவை அல்ல.

வாசனையற்ற காக்க மல்லி என்று சொல்லும் மலர்களையும் பூஜைக்கு பயன்படுத்தகூடாது. பூக்கள் புதியவையாக இருக்கட்டும் பூஜைகள் நிச்சயம் இறைவனுக்கு பிடிக்கும். 

Follow Us:
Download App:
  • android
  • ios