Asianet News TamilAsianet News Tamil

"ஐயப்ப பக்தர்களை சோதிக்கும் இஸ்லாமியர்" – வரலாறில் ஒரு பாகம்

sabarimala special
Author
First Published Dec 17, 2016, 10:14 AM IST


ஒரு இஸ்லாமியர் கொள்ளைக்காரனாக இருந்தனர். அவரது பெயர் பாபர். இவர், ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில், பக்தர்களுக்கு கூடாரங்கள் அமைத்துக் கொடுத்து தங்க வைத்தார். அப்போது, தங்கும் பக்தர்களிடம் நகை, பணத்தை கொள்ளையடித்துவிடுவார். பின்னர், அந்த பொருட்களை தன்னுடைய கூட்டாளிகளுக்கு கொடுத்துவிடுவார்.

நூதன முறையில் கொள்ளையடித்து கொண்டிருந்த கொள்ளையன் பாபரை, பிடிக்க யாராலும் முடியவில்லை. இதனால், அரசர்கள் அவரை பிடித்து கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தனர். ஆனாலும், முடியவில்லை. இதையடுத்து, ஐயப்பனிடம் சென்று முறையிட்டனர்.

sabarimala special

ஒருமுறை ஐயப்பன் பாபரை பார்க்க காட்டுக்கு சென்றார். குழந்தை வடிவில் இருந்த ஐயப்பன், பாபரை நேரில் சந்தித்து, பக்தர்களிடம் கொள்ளையடிப்பதை நிறுத்தும்படி எச்சரிக்கை விடுத்தார். என்னைக் காணவரும் பக்தர்களை துன்புறுத்தினால் உன்னை அழித்துவிடுவேன் என்றும் கூறினார்.

இரக்க குணம் கொண்ட பாபர் சிறுவனான ஐயப்பனை பார்த்து, நீ என் குழந்தை போல இருக்கிறாய். உன்னை எப்படி நான் கொல்வேன். என்னை நீ துன்புறுத்தாதே. போய்விடு என்றார். இதற்கெல்லாம் கலங்காத ஐயப்பன் பாபரை கொல்ல முயன்றார்.

sabarimala special

உடனே பாபர், என்னை நீ கொன்றுவிட்டால் என்னை நம்பி இங்கு குடியிருக்கும் மக்களை என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டார்? உடனே ஐயப்பன் அவர்களுக்கு வேண்டிய பொருளை கொடுத்து நல்லபடியாக வாழ வைக்கிறேன்  என உறுதியளித்தார்.

அதன்படி அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது. அத்துடன் எனது கோயிலுக்கு வரும் பக்தர்கள் உனது இடத்துக்கும் வருவார்கள். அவர்களை சோதித்தபின்பே நீ எனது மலைக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும். இதன்படி சரியாக விரதமிருக்காதவர்கள், பிரம்மச்சாரியம் பூணாதவர்கள், இளம்பெண்கள் ஆகியோரை நீ இந்த இடத்திலேயே தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஐயப்பனின் தாராள மனதை அறிந்த பாபர், ஐயப்பனின் உத்தரவின்படி இதுவரை அவரது பக்தர்களை சோதித்து கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்தப் பள்ளிவாசலில் பக்தர்களுக்கு இப்போதும் திருநீறு தருகிறார்கள். அங்கு விபூதி பூசியபிறகுதான் சபரிமலைக்கு செல்வது வாடிக்கையாகவே உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios