இந்தியாவில் நாளுக்கு நாள், கொரோனா அதிகரித்து வருவதால்   மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், மக்கள் அனைவரும் முடிந்த வரை வீட்டை வெளிட்டு வெளியே வரவேணும் என அரசு சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும், அணைத்து மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்திலும், பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது மத்திய மற்றும் மாநில அரசுகள்.

இதனால் எப்போது ஷூட்டிங், டப்பிங், பட விழாக்கள் என பிஸியாக இருந்த பிரபலங்கள் அனைவரும் வீட்டின் உள்ளேயே முடங்கியுள்ளனர். தற்போது கிடைத்திருக்கும் இந்த ஓய்வு நாட்களை குடும்பத்துடன் செலவிட்டு வரும் அவர்கள், அடிக்கடி தங்களுக்கு பிடித்த சமையல் செய்து அசத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகர் ஆர்யாவின் காதல் மனைவி, தன்னுடைய கணவருக்கு விதவிதமான கேக் போன்ற சில உணவு பொருட்களை செய்து கொடுத்து அசத்தி வந்த நிலையில், தற்போது கவர்ச்சி உடையில் டான்ஸ் ஆடி ரசிகர்கள் அனைவருக்குமே கண்களுக்கு விருந்து கொடுத்துள்ளார்.

திருமணத்திற்கு முன், அடிக்கடி டான்ஸ் ஆடி வீடியோ வெளியிடும் சாயிஷா சமீப காலமாக அது போன்ற வீடியோக்களை வெளியிடுவது இல்லை. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின், ஆர்யா இல்லாமல் அவர் மட்டும், அசத்தல் நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே பார்த்ததை விட இந்த வீடியோவில் கொஞ்சம் குண்டாக தெரிகிறார் சாயிஷா. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது சயீஷா கஜினிகாந்த், காப்பான் படத்திற்கு பின் மூன்றாவது முறையாக கணவர் ஆர்யாவுடன் இணைந்து ‘டெடி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். கன்னட படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா பிரச்சனையின் காரணமாக தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.