Asianet News TamilAsianet News Tamil

பெண்கள் லெக்கின்ஸ்.. பசுமாட்டு கறிய வாழை இலையில கட்டுன மாதிறி இருக்கு.. பாதிரியாரின் வக்கிர பேச்சு.

அது உள்ளாடையாக அணியும் ஒன்று. அப்படிப் பார்த்தால் அது மூன்றாவது அடுக்கில் உடுத்தப்படுகின்ற ஒரு ஆடை. ஆனால் நமது ஊரில் அதை போட்டுக் கொண்டு பெண்கள் கலக்குற கலக்கை பார்க்கணுமே.. ஓ தெய்வமே... அந்த உடையை சின்னசின்ன ஒல்லியான பெண்கள் அணிந்தால் பிரச்சினை இல்லை, சிலசில குண்டு குண்டு அக்காக்கள் போட்டுக்கொண்டு நடக்கும்போது " பசு மாட்டுக் கறியை வாழையிலையில் பொட்டலம் கட்டி வைத்தது போல இருக்கும்".

 

Womens leggings .. Be like a cow's meat in bunduled banana leaf .. Priest's perverse speech.
Author
Chennai, First Published Dec 4, 2021, 3:39 PM IST

பல அயல்நாடுகளில் உள்ளாடை அணிந்து கொள்ளும் லெக்கின்ஸ் இந்தியாவில் மேலாடையாக அணியப்படுகிறது என்றும், சிலர் குண்டு பெண்கள் அந்த லெக்கின்ஸ்களை அணிந்து வரும்போது பசு மாட்டு கறியை வாழையிலையில் கட்டி வைத்தது போல இருக்கும் என கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் பேசியுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அவரின் இந்த பேச்சை பலரும் கண்டித்துவருகின்றனர். இது வக்கிரத்தின் உச்சம் என்றும்பலரும் விமர்சித்து வருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஆபாச பேச்சுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமூக ஊடகங்களில் பெண்களை அவமானப்படுத்துவது, அவர்களை மிகுந்த ஆபாச வார்த்தைகளால் பேசுவது போன்ற செயல்கள் பரவி விரவிக் கிடக்கிறது. அதிலும் குறிப்பாக ஆன்மீக போர்வையில் உள்ள பலர், பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடும் சம்பவங்கள்  வெளிச்சத்துக்கு வருவது அதிகரித்துள்ளது. கடவுளின் பெயரால் பெண்களின் கற்பை சூறையாடும் போலி சாமியார்கள் பெண்களை சிறுமிகளை பாலியல்  வன்புணர்வுக்கு ஆளாக்கும் மதபோதகர்கள் என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக செய்திகள் உலா வந்து கொண்டிருக்கிறது. மனித சமூகத்தை நல்வழிப்படுத்தும் மதங்களும், மார்க்கங்களும் இன்று மனித சமூகத்தில் வெறுப்புக்கள், பூசல்களை ஏற்படுத்தும் ஆபத்துக்களாக மாறும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இன்னொரு மதத்தை இழிவு படுத்துவது, மதத் தூய்மைவாதம் பேசுவது, மதத்தின் பெயரால் இன அழிப்பு செய்வது போன்ற சம்பவங்கள் தலைதூக்க தொடங்கியுள்ளது. 

Womens leggings .. Be like a cow's meat in bunduled banana leaf .. Priest's perverse speech.

இது ஒருபுறமிருக்க இன்று ஆன்மீகத் தளத்தில்  இருப்பவர்கள்  பேசுகின்ற பேச்சுக்கள் சர்ச்சைகளாகவும் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதாகவும் உருவெடுத்து வருகிறது. ஜார்ஜ் பொன்னையா என்ற மதபோதகர் இந்துக் கடவுள்களையும், பிரதமர் மோடி தமிழக அரசு என பலரையும் மிக மோசமாக பேசிய சம்பவம் சமீபத்தில் பெரும் ஏற்படுத்தியது. பலரும் அவரை கண்டித்தனர் பின்னர் இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இஸ்லாம் மார்க்கத்தை சேர்ந்த ஒருவர் முகநூல் கணக்கு வைத்துள்ள இஸ்லாமிய பெண்களை மிக தரக்குறைவாக பேசினார். இது ஒருபுறம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இவற்றுக்கு மத்தியில் ஒரு கிறிஸ்தவ மத போதகர் பெண்களை மிகவும் இழிவுபடுத்தும் வகையில் வக்கிரமாக பேசியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அந்த மத போதகரை பலரும் கண்டித்து வருகின்றனர். அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பது:-

சில இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம் பெண்கள் பர்தாவுக்கு கீழே சுடிதாரும், அதற்கு கீழே உள்ள ஆடையாக அணிந்து கொள்ளும் ஒரு உடை தான் லெக்கின்ஸ். இந்த லெக்கின்ஸ் மேலே அணிவது அல்ல, அது உள்ளாடையாக அணியும் ஒன்று. அப்படிப் பார்த்தால் அது மூன்றாவது அடுக்கில் உடுத்தப்படுகின்ற ஒரு ஆடை. ஆனால் நமது ஊரில் அதை போட்டுக் கொண்டு பெண்கள் கலக்குற கலக்கை பார்க்கணுமே.. ஓ தெய்வமே... அந்த உடையை சின்னசின்ன ஒல்லியான பெண்கள் அணிந்தால் பிரச்சினை இல்லை, சிலசில குண்டு குண்டு அக்காக்கள் போட்டுக்கொண்டு நடக்கும்போது " பசு மாட்டுக் கறியை வாழையிலையில் பொட்டலம் கட்டி வைத்தது போல இருக்கும்".அது ஒரு கண்றாவி.. ஏன் அவர்கள் கணவருக்கு அதை கண்டிக்க தெரியாதா? பெற்ற மகளுக்கும், மகனுக்கும் அது தவறு என்று சொல்லத் தெரியாதா? அதைப் போட்டுக்கொண்டு  அலையுதுங்க..  ஒரு ஆண் இச்சையுடன் ஒரு பெண்ணை பார்த்தால் பாவம் செய்ததற்கு சமம்.. அப்படி ஒரு ஆணுக்கு இசையை நீ ஏற்படுத்துவதால் அது அந்த பெண்ணுக்கும்தான் பாவம்.

"

நான் ஆபாசமாக பேசுகிறேனா? என் மீது கோபம் வருகிறதா? ( எதிரில் உள்ளவர்களை பார்த்து கேட்கும் அந்த பாதிரியார்) இவற்றை எல்லாம் இப்படி புட்டு புட்டு வைத்தால்தான் பலருக்கு அது விளங்கும், பட்டும் படாமல் கூறினாள் கிளவுஸ் போட்டுக்கொண்டு கை கழுவுவதை போல இருக்கும். அழுக்கும் போகாது, தண்ணீரும் வீணாகும். எல்லாரும் நான்வெஜ் சாப்பிடுகிறார்கள், எல்லாரும் வாட்ஸ்அப் யூஸ் பண்ணுகிறார்கள், எல்லாரும் பேஸ்புக் பயன்படுத்துகிறார்கள், எல்லாரும் அதைசெய்கிறார்கள் என்று நீங்களும் செய்தால் நீங்களும் தவறான பாதைக்கு தான் போவீர்கள். மொத்தத்தில் எல்லாமே பாவம் தான் என அவர் கூறியுள்ளார். அவரின் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios