Asianet News TamilAsianet News Tamil

கி.வீரமணி படத்துக்கு அடி உதை...! கொந்தளித்த பாஜக மகளிர் அணி...!

1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த பெரியார் தலைமையிலான பேரணியில் ராமர் மற்றும் சீதையின் உருவபொம்மையை ஆடையில்லாமல் எடுத்து சென்றதாக நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் பத்திரிகையின் ஐம்பதாம் ஆண்டு விழாவில் பங்கு பெற்ற போது கருத்து தெரிவித்து இருந்தார். 

women wing  attacked veeramani for insulting  god ramar seetha devi
Author
Chennai, First Published Jan 26, 2020, 6:23 PM IST

கி.வீரமணி படத்துக்கு அடி உதை...! கொந்தளித்த பாஜக மகளிர் அணி...! 

கடந்த 15 ஆம் தேதியில் இருந்தே தமிழகத்தில் பெரியார் ராமர் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கின்றது. இன்றுவரை இதற்கு ஓர் முடிவு எட்டப்படாத நிலையில் தற்போது திராவிட கழக கி.வீரமணியின் படத்தை மகளிர் அமைப்பினர் துடைப்பம் மற்றும் செருப்பு கொண்டு அடிக்கும் நிகழ்வில் இறங்கி உள்ளனர்

1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த பெரியார் தலைமையிலான பேரணியில் ராமர் மற்றும் சீதையின் உருவபொம்மையை ஆடையில்லாமல் எடுத்து சென்றதாக நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் பத்திரிகையின் ஐம்பதாம் ஆண்டு விழாவில் பங்கு பெற்ற போது கருத்து தெரிவித்து இருந்தார். ரஜினிகாந்தின் இந்த கருத்து பெரும் திகவினரிடம் பெரும் எதிர்ப்பை கிளப்பியது. இதற்கு ரஜினிகாந்த் கண்டிப்பாக மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து வந்தனர் இடதுசாரி கட்சிகள் மற்றும் திகவினர் 

அதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த், மன்னிப்பு கேட்க முடியாது வருத்தம் தெரிவிக்க முடியாது என பகிரங்கமாக செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த தி.க மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பொள்ளாச்சியில் பெரியார் உருவபொம்மை எரிப்பு மற்றும் சிலை உடைப்பு செய்துள்ளனர்.

 

மற்றொரு பக்கம் பகவத் கீதையை இழிவுபடுத்திய கி.வீரமணி படத்தை வைத்து, மகளிர் அமைப்பினர் செருப்பு மற்றும் துடைப்பம் கொண்டு அடிப்பது போல புகைப்படம் எடுத்து அவர்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து உள்ளனர். இது குறித்த பதிவுகள் மற்றும் புகைப்பட சான்று  சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios